உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| Öé கவையுன்வைச் சமைப்பதற்கு மறுத்து விட்டால் சொல்கின்ற பெண்ணுரிமை வந்தா சேரும்? சுவையுணரா வாழ்வுமொரு வாழ்வா? நூல்கள் தொடுகின்ற கைகளினாற் பானை தொட்டால் நவைஎதுவும் நிகழ்வதில்லை; தாலாட் டுப்பா நன்கறிந்த தாய்மார்தாம் எவரே உள்ளார்? இவையறிந்தால் பிற்போக்காம்! நன்மை யாவும் எடுத்தெறிந்தா முற்போக்குக் காணல் வேண்டும்? முன்னேற்றம் என்றுசொலி முழங்கும் மாதர் முகத்துக்குப் பொலிவுதரும் மஞ்சள் உண்டா? மின்னேற்றம் பொலிமுகத்தில் பொடிமாப் பூசி மீசைக்குப் போட்டியிடல் நன்றோ? சொல்வீர்! என்னோற்றோம் இதுகாண? தாழ்ந்த கூந்தல் எப்படியோ உயர்ந்ததம்மா, கொண்டை என்று பன்னுாற்று வகைகளிலே பாழ்ப டுத்திப் பாவையரே அழகெல்லாஞ் சிரிக்கக் செய்தீர்! கானத்தும் குகையிடத்தும் வாழ்ந்த நாளைக் காட்டுகிறார் முன்னேறிச் செல்லும் நல்லார்: மானத்தைக் காக்கின்ற ஆடை தன்னில் மதியுடையார் சிக்கனத்தை விழையார் அம்மா; மேனிக்கும் மனத்துக்கும் மென்மை வேண்டும் மேலாடை ஒன்றுக்கும் மென்மை வேண்டா: மானுக்கு நிகராக வாழ்தல் ஒன்றே மாதர்க்கு நற்பெருமை யாகும் அம்மா!