பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 இடையில் ஒ ரா ண் டு திரைப்படத்தின் ஈர்ப்புக் கவர்ச்சிக்கு ஆளாகி சென்னை சென்றார், ஆங்கு நிகழும் நிகழ்ச்சிகள் தம் இயல்புக்கு ஏலாதன என்பதைக் கண்டு மறு ஆண்டே தமிழாசிரியப் பணிக்கு மீண்டார். 1966இல் இ ந் தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடு பட்டதாகக் கல்வித் துறையினரால் இவர்மீது வழக்கொன்று கொண்டுவரப்பட்டது. விசாரணை நடைபெற்றது அப் போது "இந்தியை எதிர்ப்பவன்தான் நான் அதற்கு என் பாடல்களே சான்று ஆனால் இப்பொழுது சாற்றப்பட்டு இருக்கும் குற்றங்கள் பொய்யானவை. எ ன் மீ து பழி சுமத்துவதற்காக இட்டுக் கட்டப்பட்டவை என்று வாக்கு மூலம் கொடுத்தார் ஆய்வுக்குப்பின் வழக்கு த ள் ளு படி செய்யப்பட்டது இளமைக் காலத்தில் முருகனைப் பாடுவதே முத்தமிழ் கற்றதன் பயன் என்றிருந்த இவர் 1940-க்குப் பிறகு சமு தாயச் சூழல்-நாடு-மொழி இவற்றையே பாடி வருகின்றார். சூழ்நிலையி ைதாக்கமும், சுமயரியாதை இயக்க வேட்கையும் , பாவேந்தர் பால் கொண்ட பற்றும் கடவுள் மேலிருந்த கருத்தை மாற்றிக் காலத்தின் தேவையைப் பா ட வ ந் த கவிஞராக ஆக்கிவிட்டன. கலப்பு மனத்தின் தேவையைப் பற்றி க வி ைத பல பாடிய இவர் தாமும் க ல ப் பு மணம் செய்வித்துத் தம் பிள்ளைகட்கும் கலப்புமணம் செய்வித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்துள்ளார் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" எனனும் வள்ளுவன் வாக்கைத் தோல்வி யுறச்செய்த பெருமை இவர்க்குண்டு. சாதி சமயங்களுக்குள் ஆட்படாமை-நன்றி மறவாமை நட்பைப் பேணல்-கொள்கைப் பிடிப்பு-குறிக்கோள் வாழ்வுஉதவும் உள்ளம்-ஒட்டார் பின் செல்லாமை - ஆசிரி ய ர் ப் போற்றல்-ஆகியன இவர்தம் இயல்பிற் சில,