பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விண்மதியை மிதித்துவிட்டான் மானு டத்தின் வெற்றியென மகிழ்ந்திருந்தேன் வியந்து நின்றேன்; ஒண்மதியை மிதித்துவிட்டான் மானு டத்தின் ஒருதோல்வி எனத் தளர்ந்தேன் ஒய்ந்து நின்றேன்; விண்வழியில் மிதந்துவந்தான் மானு டத்தின் வெற்றியிது வெனமகிழ்ந்தேன் வீறுங் கொண்டேன்: மண்வழியை மறந்துவிட்டான் மானு டத்தின் மறுதோல்வி எனவீழ்ந்தேன் மயக்கங் கொண்டேன். வாழ்வென்னும் வழியதனிற் செல்லும் போது வழுவாமல் நடுவில்தான் நடத்தல் வேண்டும் பாழ்.மனிதன் அதை மறந்தான் ஒரஞ் சென்றே பழகிவிட்டான்; கடைத்தெருவில் ஏகுங் காலை நீள்வழியின் ஒரத்தே நடத்தல் வேண்டும் நெடுமனிதன் நடுவில்தான் செல்லு கின்றான் சூழ்மதியன் எதுசெயினும் மாறு பட்டே தொலைகின்றான் ஆறறிவிற் குறைந்தே போனான். துறவுநிலை தனைநோக்கின் மனந்தி றந்து சொல்வதற்கோ வழியில்லை; வாணி கந்தான் கரவுகளுக் கிருப்பிடமாம்; கல்விக் கூடம் கட்டவிழப் பயில்களமாம்; கோவி லென்றால் திருடர்களும் கயவர்களும் மறைந்து கொள்ளத் தேர்ந்தெடுத்த குகையாகும்; மாக்கள் போல அறநெறியை அறமறந்தார் வெறியுங் கொண்டார் அதனைத்தான் மதமென்றும் விளம்பு கின்றார். اه مه ۹ و = 3 ص یافته