பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சாதியினால் பதவியினால் சமயப் போக்கால் தாழ்ந்தவரும் உயர்ந்தவரும் இல்லை யென்றே ஒதுவதாற் பயனில்லை; உள்ளம் ஒன்றி உடன்பிறப்பென் றனைவரையுஞ் சமமாக் கொண்டு மேதினியில் வாழ்வதுதான் மானி டர்க்கு மேன்மைதருஞ் செயலாகும் மேல்கீழ் எல்லாம் வேதமொழி எனவந்தால் மக்கள் இங்கு வேறாகி மாக்களென நீண்டு நிற்பர். கடமைசெயத் தயங்குகிறோம்; கண்ணி யத்தைக் காற்றின்மிசைப் பறக்கவிட்டோம் ; கட்டுப் பாட்டை அடிமைநிலை எனக்கருதி உதறி விட்டோம் ; ஆதலினால் மானுடத்தைச் சீர ழித்தோம்; கெடுவினையை விட்டொழித்தால் அருவ ருக்கும் கீழ்மைதனைச் சுட்டெரித்தால், இருளில் வீழ்த்தும் மடமையினைத் தகர்த்தெறிந்தால், மக்கட் பண்பை மதித்திருந்தால் மானுடமே வெல்லும் வெல்லும்.