பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நம்பால் இவர்தாமும் நல்வாக்குக் கேட்கின்றார்: வெம்பி யிருக்கையில் வேறோர் திசைதன்னில் நாட்டில் தருமம் நலிந்ததென்று கண்கலங்கி நாட்ட வருகின்றார் நான்கு வகைத்தருமம்: தந்திரத்தால் நல்ல தருமத்தின் பேர்சொல்லி மந்திரங்கள் ஓதி வருபவரைக் காண்கின்றோம்; தாய்நாட்டுப் பற்றினிலும் தாய்மொழியின் அன்பினிலும் சேய்நாட்டுப் பற்றுமிகுஞ் சிந்தையரும் கேட்கின்றார்: அன்று முடியரசர் ஆண்ட திருநாட்டை இன்று பெறுவோம் இனவழியில் ஒன்றாவோம்’ என்று முரசார்த் தியங்குகிற ஓரணியில் நின்றுபணி செய்வோரும் நேர்நின்று நம்மிடத்தே "உங்கள்நல் வாக்கை உவந்தே கொடுத்திடுக எங்கட்கே. என்று நமைக் கேட்கின்றார் இந்நாளில்; யாருக்கு வாக்களிப்போம் என்றுமிகச் சிந்தித்துப் பாருக்கு நன்மைதரும் பான்மைதனை மேற்கொள்க! காசு பனங்காட்டிக் கைநீட்டிக் கேட்பவரை வீசி எறிந்திடுக! விற்காதீர் தன்மானம்! நாளைக் கொருகொள்கை பேசும் நயவஞ்சர், தாளைப் பிடிப்பார்கள் தந்து கெடுக்காதீர்! நாட்டைத் திருத்திடுவேன் என்று நமைஏய்ப்பர் வீட்டைப் புதுக்கலன்றி வேறொன்றும் தாமறியார் ஆங்கவர்க்கும் வாக்கை யளிக்காதீர்! சாதிஎனும் நீங்காப் பெருநோயை நேர்நிறுத்திக் கேட்பவர்க்கும் கண்ணோட்டங் காட்டாதீர்! காட்டிவிடின் தன் தலைமேல் மண்வாரிப் போடும் மதயானை போலாவீர்;