பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முக்கோண வடிவத்தைக் காணும் போது முகங்கோனுஞ் சிலருக்கு; நாட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் தம்மி னத்தார் * இனிதாக வாழ்வதுதான் அவர்தங் கொள்கை; தக்கார்தம் நெஞ்சமெலாம் தாம்பி றந்த தாய்நாட்டின் நலம்நினைக்கும்; குடும்பத் திட்டம் எக்காலும் தமதுநலத் திட்ட மென்றே

  • / எல்லோரும் நினைந்தொழுகின் நாடு வாழும்

கருப்படியில் விளையாடிக் களிக்கும் மாந்தன் காமமெனும் நெருப்படியில் நின்று கொண்டே நெருக்கடியைத் தன்வீட்டில் ஆக்கி விட்டு, நெடுந்தெருவில் பள்ளிகளில் ஊரில் எங்கும் நெருக்கடியை ஆக்குகிறான்; ஆள்வோர்க் கென்றும் நெருக்கடியை ஆக்குகிறான்; இவனால் நாட்டில் உருப்படியாய் நலமொன்றும் வளர்வ தில்லை ஒளிநெருப்பில் அவன் நலமும் கருகித் தீயும். செல்வழியில் இடர்ப்பாட்டை முன்னு ணர்த்தச் சிவப்புநிற விளக்கொன்று வைத்தல் போல இல்வழியில் இடர்ப்பாட்டை முன்னு ணர்த்த இருப்பதுதான் முக்கோணச் செவ்வி ளக்கு; நல்வழியில் நடந்துசெல நினைவோர் அந்த நலம் பயக்கும் ஒளிவிளக்கைத் துணையாக் கொள்வர்; சொல்வழியைக் கேளாரேல் விளக்கி ருந்தும் தோண்டுகுழி வீழ்ந்தழியும் மூடர் ஆவர்.