பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இருண்ட விடு. .ു് :് വ്', ' வரம்பெல்லாம் கதிர்வளைந்து முதிர்ந்தி ருக்கும் வயல்தந்த மணிகுவியும் களஞ்சி யங்கள், வரம்பில்லாச் செல்வங்கள் தென்றல் வீசும் வளமனைகள், குறிப்புணர்ந்து பணிகள் செய்வோர், நிறங்குன்றாப் பொன்னணிகள் முதலா யாவும் நிறைந்ததொரு வாழ்வெனினும் பிள்ளை இன்றேல் ' நரம்பில்லா யாழாகும்; உயிர்த்த லில்லா நன்மண்ணாற் புனைந்த எழிற் பாவை யாகும். பளபளக்கும் வெண்ணிறத்துச் சுவர்கள், நான்கு பக்கத்தும் நின்றொளிரும் பளிங்குத் துரண்கள். வழுவழுப்புத் தரையின்மேல் வண்ணப் பூக்கள் グア வகைவகையா/ச் செய்திருக்கும் பளிங்குக் கற்கள், குளுகுளுத்த தென்றல்வரும் சாள ரங்கள் கொண்டிலங்கும் மாமனைதான்; எனினும் அங்கே தழுதழுத்த மொழிபேசும் பிள்ளை ஒன்று தவழ்ந்திலதேல் மலரில்லாச் சோலை யாகும்.