பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பெறுவதற்குள் முக்கோண நினைவு வந்து பிதற்றுகிறேன்...என மூக்கில் விரலை வைத்தாய்! கருவயிற்றாய் முன்னுணர்ந்து நடவா விட்டால் கன்னத்தில் விரல்வைப்பாய் ఆశవాణా நாளில்; திருமணத்தை நடத்திடுவோர், குடும்பப் பாங்கைத் தெரிந்துநலம் பெறவிழைவோர் நெற்றி மீது விரல்வைத்துச் சிந்திக்கும் பழக்கம் பெற்றால் விடிவுண்டு நாட்டுக்கும் நமக்கும் என்றேன். சிந்தனையே இல்லாமல் எட்டும் பத்தும் சீரழிய மகப்பெறுதல் வீட்டிற் குள்ளே வந்துபுகும் வறுமைக்கோர் அறிவிப் பாகும்; வளமிழந்து நலமிழந்து நாடு தானே நொந்தழியுஞ் சிறுமைக்கோர் அறிவிப் பாகும்; நுண்மதியர் ஈதுணர்ந்தே விடும் நாடும் வெந்துயரில் வீழாமற் காப்ப தற்கு விளக்குகின்றார் முக்கோணச் சின்னங் காட்டி. என்றுரைத்தேன் மொழிந்தவெலாங் கேட்ட நல்லாள் எழில்கொழிக்கும் நமதில்லம்; நலங்கள் பெற்று நின்றினிக்கும் நம்நாடு; நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் இவ்வெண்ணம்; அதனால் நீங்கள் நன்றுரைக்கும் படிநடப்பேன்; கட்டுப் பாட்டு நலங்காக்கும் பொறுப்புமக்கும் வேண்டு மத்தான்! என்றனுக்கு மட்டுமிது கடனாம் என்றே ஏமாந்து போகாதீர்' என்று. ரைத்தாள்.