பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தெருவோரம் குத்துக்கல் தெரிந்தாற் போதும் சிலநாளிற் கடவுளென அதன்பேர் மாறும்: திருநீறும் குங்குமமும் ஒருநாள் தோன்றும்; சிலமலர்கள் அதன் தலைமேல் மறுநாள் தோன்றும்; வருவோரும் போவோரும் அதனைக் கண்டு வழிநின்று வியந்துபல பேசிச் செல்வர்; மறுநாளே பாவாடை யம்ம னாகும் மலர்சூடம் ஊதுபத்தி வாடை வீசும். பாவாடை யம்மனுக்கு வெள்ளி செவ்வாய் பாலாலே அபிடேகம் நடக்கும்; அங்கே பூவோடு வருமாதர் கூட்டம் சேரும்: பூவாடைப் பக்தர்களின் குழுவும் கூடும்: போவாரும் வருவாரும் மிகுத லாலே பொலிவுள்ள உண்டியலும் அங்கே தோன்றும்; ஒவாதே உண்டியலும் நிறைவ தாலே உள்நாட்டுப் பூசல்களும் மிகவே தோன்றும், குத்துக்கல் சாமிக்குச் செல்வம் பொங்கிக் குவிகின்ற நிலை வரலும் உரிமைக் காகப் பத்தருக்குள் அடிதடிகள் குத்து வெட்டுப் பரிமாறல் தவறாமல் நடப்ப துண்டு; குத்துக்கல் எனதென்றே ஒருவன் சொல்வான்; குங்குமத்தை முதன்முதலில் நான்தான் போட்டுப் பத்திக்கு வழிவகுத்தேன் என்பான் மற்றோன்: பணமெனக்கே சொந்தமென்ட்ான் இடத்துக் காரன்