பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மக்கள் வடிவொன்றால் வாய்க்கா துயர்திணைதான் மக்கள் இயல்பதுதான் மாண்பார் உயர்திணையாம் என்னுங் கருத்தை இலக்காக்கி வாழ்ந்தோமா? -- இன்னும் மனிதரெனும் பேரால் இயங்குகிறோம்: விண்ணிற் பறக்கின்றோம் வெற்றி சிறக்கின்றோம் எண்ணிற் பெருமைஎலாம் எண்ணில் அடங்காவே! ஆழ்புனலில் மூழ்குகிறோம் ஆங்கெழிலா நீந்துகிருேம் குழ்பெருமை அத்தனையும் சொல்லுக் கடங்காவே! என்று பறைசாற்றி எக்களித்து நிற்கின்றோம். தன்றுநன் றென்றாலும் நானும் நிலையிலுளோம்; நம்மிற் பறவையினம் நன்றே பறப்பதுண் டிம்மி யளவும் இரும்புனலில் நீந்துவதில் மீனிற் சிறக்கவிலை மேன்மை நமக்கேது? -- -- வானிற் படுதோல்வி! வார்புனலில் அத்தோல்வி! விண்ணகத்தும் நீரகத்தும் வெற்றி இலை.எனினும் மண்ணகத்து வெற்றி எதும் வாய்த்ததுவோ? வாயில்லை; காட்டில் விலங்கினமுங் கண்டபடி தானடக்கும் நாட்டில் திரிகின்ற நம்நடையும் அப்படியே; நல்ல நடையுண்டா? நம் நடையில் செம்மையுண்டா? இல்லை பொலிவுண்டா? ஏனோ முடமானோம்? கற்கின்ருேம் நூல்கள் கசடறவே, கற்ற வணம் நிற்கின்ருேம் என்றுரைக்க நீதியுண்டா? நன்கு நடக்காமல் நிற்கின்றோம்; நாவன்மை கொண்டோம் அடுக்காத தீச்செயல்கள் ஆயிரமே செய்தாலும் ՇԼՔւգ- மறைப்பதற்கே முன் கற்ற கல்வியிலே தேடி அலைந்து தெரிவிப்போம் சான்றுகளும்;