பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f விளைவு ? இளைஞர் துரைராக கவிஞர் முடியரசன் ஆனார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி தமிழறிவைத் தந்து சிறப்பித்தது. அக்கல்லூரியில் நிகழும் அறிஞர் பெருமக்களின் உரைகள். அப்போது நிகழ்ந்த உரை பாடல்கள் கவிஞரின் உள்ளத்தில் ஆழ்ந்த மொழிப் பற்றை, யும் இனப்பற்றையும் கிளர்ந்தெழச் செய்தன. 1940ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் தொடர்பு கொண்டார் இ க் .ெ த டர் பு அவருடைய ஆளுமையை வெற்றிபெறச் செய்த போதிலும் 1943ஆம் ஆண்டு வித்துவான் தே ர் வி ல் தோல்வியுறச் செய்தது. அவர் தோல்வியுறவில்லை; தோல்வியுறுமாறு செய்யப்பட்டார், இடையிலே நவாபு டி. எசு இராசமாணிக்கம் நாடகக் குழு தம்பால் பணியாற்ற வருமாறு அழைத்தது; சென்றார். அங்கிருந்த 'சிறை வாழ்க்கை'யும் மதவழிபாட்டு முறை களும் வெறுப்பை விளைவித்தன. எனவே போன சுவடு அ ழி யு மு ன் ைரே திரும்பி வந்துவிட்டார். பின்னர்த் தம்மைத் தோல்வியுறச் செய்தவர்களைத் தோற்கடிப்பதற் காகத் தலைமறைவாக' இருந்து படித்து வித்துவான் பட்டம் பெற்றார். - 1947-1949 வரையிலான இரண்டாண்டுக் காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இக்காலம் அவர்தம் எழுத்து வன்மை உரம் பெற வாய்ப்பாக அமைந்தது மட்டு மின்றி அறிஞர் பலரோடு தொடர்புகொள்ளவும் ஏற்றதாக இருந்தது, போர்வாள், கதிரவன், குயில், முருகு, அழகு முதலிய இதழ்கள் இவர்தம் சிறுகதைகளையும், கவிதைகளை யம். கட்டுரைகனையும் தாங்கி வந்தன அப்பொழுது புதுக் கோட்டையிலிருந்து வெளிவந்த .ெ ப - ன் னி எனும் இலக்கிய இதழ் பாரதிதாசன் பரம்பரையில் முன்னணியில் நிற்பவராக அறிமுகம் செய்து வைத்தது. .