பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 நட்பைப்போல் நற்பண்பு நானிலத்துக் கண்டதிலை அப்பப்பா அவ்விடத்தும் ஆற்றுகிறோம் வஞ்சகங்கள்; நம்மைத் தெளிந்திருக்கும் நண்பர்க்குந் தீமைசெயல் செம்மை நெறிஎன்றே செய்து வருகின்றோம்; எள்ளுங் கயமை எவையுளவோ அவ்வெல்லாம் உள்ளம் உவந்தே உயர்வாக ஆற்றும் நமை மக்களே போல்வரென வைத்திருக்கும் இவ்வுலகம் மக்களெனப் போற்றி மதித்து வழங்காது; நாட்டில் பொதுத்துறைகள் நல்ல பணித்துறைகள் வேட்டம் புரியிடம்போல் தேட்டை யடிக்கின்றோம்; நீதி யுரைக்கும் நெடுமன்றில் பேரறத்தை மீதி யிருக்கத்தான் விட்டோமா? நம்மாட்சி! ஆண்டவன் கோவிலுக்குள் ஐயஓ நாம்புகுந்து வேண்டா வினையெல்லாம் செய்யாமல் விட்டோமா? செய்யாத தீமையிலை செய்யா இடமில்லை நையாமல் தைந்துமனம் நாளும் உருகுகிறேன்; நீதிகெடும் மாந்தர்தமை நெஞ்சம் நினைந்துவிடின் வேதனைகள் கொஞ்சமல்ல வெந்துழன்று வாடுகிறேன்: பண்புடையார்ப் பட்டுண் டுலகம் எனவுரைத்த பண்புணர்ந் தாற்றுவமேல் பாரில் உயர்ந்திடுவோம்; ஆதலினால் பண்புயர்க அன்புயர் க என்றுசில ஒதி முடித்தேன் உவந்து