பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 'உன்னை அழைக்கலேடா, மண்டு! - எங்கே அந்தக் காஸ்ட்யூம் டைரக்டர்?” 'இதோ வந்துவிட்டேன்!' என்று பறந்து வந்தார் அவர். 'ஏன் ஐயா, உமக்கு நான் எத்தனை தரம் சொல்வது? - அம்மாவுக்குத் தைக்கிற ஜாக்கெட்டிலே மட்டும் ஜிகினா வேலை, I , , கிகினா வேலை ஒன்றுமே செய்ய வேண்டாமென்று!

'காஸ்ட்யூம் கொஞ்சம் ரிச்'சா இருந்தாத்தானே ஸார், அம்மா ராஜ வம்சத்தைச் சேர்ந்தவங்கன்னு படத்திலே தெரியும்...” 2. 'இதோ பாரும், நீங்கள் எனக்கொன்றும் யோசனை சொல்ல வேண்டாம் - நான் சொல்கிறபடி செய்யும்; போதும்!' என்றவர், 'ஆக்ஸிடெண்ட், ஆக்ஸிடெண்ட்!” என்ற அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார். லீலாவின் விரலிலிருந்து கீழே விழுந்த ஒரு சொட்டு ரத்தத்தை விழி பிதுங்கப் பார்த்தவண்ணம், 'அம்மா கையிலேயிருந்து ரத்தமாக் கொட்டுதுங்க!' என்றான் சந்தர்ப் பத்தை எந்தப் பாடுபட்டாவது உபயோகித்துக் கொள்ளப் பார்த்த பீதாம்பரம். 'பார்த்து இவ்வளவு நேரம் ஆகியும் பேசாமல் நிற்கிறாயேடா, மக்கு! - ஓடு ஒடு, உடனே நம்ம டாக்டருக்குப் போன் பண்ணி 'இம்மீடியட்'டா இங்கே வரச் சொல்லு!’ என்று கூறிவிட்டு, ஜாக்கெட்டைத்தானே பக்குவமாகக் கழற்றிச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு லீலாவின் கடைக்கண் வீச்சை எதிர்நோக்கி ஏங்கி நின்றார். அதற்குள் டாக்டர் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து 'ஸெப்டிக் ஆகாமலிருப்பதற்காக ஒரு இஞ்ஜக்ஷன் கொடுத் தார். பிறகு, கீறல் விழுந்த இடத்தைத் துடைப்பதற்காக லீலாவின் கட்டை விரலைப் பிடிக்கப்போனார். அதற்குள் படாதிபதி முந்திக்கொண்டு, 'நோ, நோ! - அந்த வேலையெல்லாம் உங்களுக்கு ஏன் லார்? நான் பிடிக்கிறேன்; நீங்கள் கட்டுக் கட்டுங்கள், போதும்!” என்றார். டாக்டர் புன்னகையுடன் அப்படியே செய்துவிட்டுப் போனார்.