பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ‘'வேண்டாம், வேண்டாம்-நீ இங்கேயே இரு; நானே போய் வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன்!' என்று சொல்லிவிட்டுப் போனார். 'அட பாவமே, அந்தப் பாக்கியம் கூடவா எனக்கு இல்லை?” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான் ஓ.கே. நான்காம் அத்தியாயம் 'கோலாகலா ஸ்டுடியோ’’ விஷயம் என்னவென்றால், அன்றைக்கு முந்திய நாள் இரவு பிரபல நட்சத்திரங்களான மிஸ்டர் கலாமோகனுக்கும் மிஸ் நிசி லீலாவுக்கும் கோலாகலா ஸ்டுடியோவில் 'ஷல்ட்டிங் இருந்தது. 'கால்-விட்' முடிவதற்கு ஒரு மணி நேரம் இருக்குமுன்பே நிசி லீலா அவசர அவசரமாக 'மேக்-அப்பைக் கலைக்கத் தயாரானாள். அவள் மேல் ஈ உட்கார்ந்தால்கூட 'எலெக்ட்ரிக் ஷாக் அடித்தாற்போல் துள்ளும் படாதிபதி, "என்ன, என்ன?” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே மேக்-அப் அறையை நோக்கி விரைந்தார். அந்த அறையின் கதவை நெருங்கியதும் தனக்குப் பின்னால் இரைக்க இரைக்க ஓடி வந்த பீதாம்பரத்தை அவர் ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, 'என்ன லீலா, என்ன நடந்தது? எந்தப் பயல் உன்னை என்ன சொன்னான்? - சொல்லு, அவனை உடனே சுட்டு வீழ்த்திவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்!” என்று 'ரிவால்வ'ரை எடுக்க ஜிப்பாப் பையில் கையை விட்டார். 'ஒன்றும் நடக்க வில்லை!' என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிக்கொண்டே, வெல்வெட் ஜாக்கெட்டைக் கழற்றிய லீலா, திடீரென்று கட்டை விரலை அழுத்திப் பிடித்துக் கொண்டு, 'அப்பப்பா!' என்று துடித்தாள். படாதிபதி பதறிப்போய் அவள் கட்டை விரலைப் பார்த்தார்; சித்திர விசித்திரத்திற்காக ஜாக்கெட்டின் மேல் தைக்கப்பட்டிருந்த ஜிகினாவின் கீறல் விழுந்து லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. 'எங்கே அந்த மடையன்?' என்று கண்களில் தீப்பொறி பறக்க இரைந்தார். 'இதோ இருக்கிறேன்!” என்று அவருக்கு எதிரே வந்து நின்றான் பீதாம்பரம். uo-@–7