பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நியாயமென்று சாதித்தான். வைதீகர்களுக்கு பழைமையில் ஊறிப் போனவர்களுக்கு - இது பிடிக்குமா? அவர்கள் லாக்ரட்டீஸ் மீது குற்றஞ் சாட்டினர். 'நாம் தொழும் தெய்வங்களை இவன் வணங்க வில்லை. புதிதாய் ஏதேதோ இறை வழிபாடுகளைக் கற்பிக்கிறான். இளைஞர் உள்ளங்களைக் கெடுக்கிறான்' என்றார்கள். அப்போது லாக்ரட்டீஸலக்கு வயது எழுபது இருக்கும். யாருக்கும் ஒரு பொல்லாங்குகூட அவன் நினைத்ததில்லை. அப்படியிருக்க, முதுமைப் பருவத்தில் அவன் குற்றவாளியாய்க் கருதப்பட்டான். ஐந்நூறு பேரடங்கிய நீதிமன்றத்தில் அவன் விசாரிக்கப்பட்டான். அவன் குற்றவாளியே என்று இருநூற்றெண்பது பேரும், அல்லவென்று இரு நூற்றிருபது பேரும் வோட்டு அளித்தார்கள். ஸ்ாக்ரட்டீஸ் கலங்கவில்லை. 'நீதிபதிகளே, உங்கள் பேச்சு எவ்வளவு நன்றாயிருக்கிறது! விவாதம் எவ்வளவு அற்புதமாயிருக் கிறது! இத்தனை நேரமும் நான் அதைத்தான் கவனித்துக் கொண்டிருந் தேன். ஆனால், அதில் உண்மையென்பது கொஞ்சங்கூட இல்லையே!' என்றான். அவன் மேலும் கூறியதாவது. 'நீங்கள் எப்படி முடிவு செய்தபோதிலும் சரி, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எதைச் சத்தியமென்று நான் கருதினேனோ, அதையே இதுவரை பின்பற்றி வந்திருக்கிறேன். பெரியோர்களே, ஆதென்ஸ் நகர மக்களே, உங்களிடம் எனக்கு மதிப்பும் அன்பும் உண்டு. ஆனால் கடவுளுக்குத்தான் நான் கீழ்ப்படிவேனே தவிர, உங்களுக்கு அல்ல. நீங்கள் என்னை விடுதலை செய்தாலும் நான் என் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டேன்!' இதைக் கேட்ட பிறகு, நீதிமன்றத்தாருக்கு அவன்மீது இரக்கம் உண்டாகுமா? கோபத்துடன் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்கள். லாக்ரட்டீஸ் வருந்தினான். எதற்கு? - எதிர்காலத்தில், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுங்கூட, அவர்களுக்கு - அந்த நீதிபதிகளுக்கு - தனக்குத் தண்டனை விதித்த நீதிபதிகளுக்கு மாறாத வசை உண்டாகுமே என்பதற்காகத்தான்! கையில் விலங்கு பூட்டிச் சிறைக்கு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன் சில நாட்கள்