பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 'அப்படி போட்றா குண்டுன்னானாம்! அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இந்த இருட்லே இங்கேன்னாய்யா வேலை?” 'ஐயா, மன்னிக்கனும். எங்களுக்கு ஊர் புதுசு; தெரியாமெ வந்துட்டோம்” என்று கெஞ்சினார் அடிகளார். அவன் விடுவானா? அதிகாரம் பண்ணவே பிறந்தவனாயிற்றே அவன்! - இப்பொழுது போலீஸ்கார உத்தியோகத்தை மறந்து விட்டான். 'ஏய், மடியிலே என்ன?” 'ஒன்றுமில்லை, ஐயா!' 'காட்டு?’’ இளங்கோவின் பொறுமை எல்லை கடந்தது. 'ஏய், நீ யார்? ஏன் எங்களைத் தொந்தரவு செய்கிறாய்? விலகி நில், வழி விடு!" என்று மேலே நடக்கலானார். 'நில்லுடி அம்மா!' என்று கண்ணகியின் கரத்தைப் பற்றி இழுத்தான் போலீஸ்காரன். 'மூடனே, உன் உடம்பில் தமிழ் ரத்தமா ஒடுகிறது?’’ என்றவாறு அவன்மீது பாய்கிறார் இளங்கோ. ‘'தேவடியாளைக் கூட்டிக் கிட்டுச் சுத்தறதுமில்லாமெ....' அடேய், அவ கண்ணகிடா, கண்ணகி!' அவ்வளவுதான்; தமிழனின் உடலில் வீரம் ஒடிக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மனிதரல்லவா இளங்கோ?ஒரே அடி! - அந்தச் சொத்தை மகன் கீழே உருண்டான். அடிகளார் வெறி கொண்டு தாக்கினார். அதைத் தவிர வேறு வழியில்லை-அப்புறம் அவனுக்குப் பேச்சு மில்லை, மூச்சு ഗ്ലാങ്ങയെ! கண்ணகியும், இளங்கோவும் நகரத்திற்குள் நுழைந்தனர். శ* : * இரவு மணி ஏழு. அடிகளாரும் கண்ணகியும் கோயிற் கோபுரங்களையும் சிற்ப சித்திரங்களையும் கண்டு மகிழ்ந் தனர்.