பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கொடுத்தாக வேண்டும். கையில் பணமில்லை. என்ன செய்வது? கடையில் கேட்கலாமென்றாலோ, போனமாத பாக்கி அப்படியே இருக்கிறது. அடிக்கடி கேட்டுத் தொந்தரவு கொடுத்தால், வியாபாரம் மந்தமாயிருக்கும் இந்த நாளில், முதலாளி கோபித்துக் கொள்வதற்கு இடமுண்டாகும். நேற்றிரவெல்லாம் யோசித்துப் பார்த்த போது, எழும்பூரி லிருந்த தம் உறவினரொருவர் நினைவு வந்தது அவருக்கு. இதுவரை பணத்துக்காக அவர் யாரிடமும் போனதேயில்லை... 'இப்போது கேட்டுப் பார்க்கலாமே?' என்று அங்கே போனார். இவருடைய அதிர்ஷ்டம் அவர் ஊருக்குப் போய் ஒரு வாரமாகிவிட்டதாம்! நாளை வாடகை கொடுக்கவேண்டிய நாள். வீட்டுக்காரர் வந்து விடுவார். என்ன செய்வது? பதினைந்து வருஷமாய் வயிற்றையும் வாயையும் மனதையுங்கடிடக் கட்டுப்படுத்திக் கொண்டு காலந் தள்ளிவந்த பரீமான் பிள்ளைக்கு, இப்போது முதல் முதலாக வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டது. பெருமூச்சுக்கு மேல் பெருமூச்சு உண்டாயிற்று அவருக்கு. திடீரென்று பலமான ஒர் அழுகுரல் கேட்டது. மறு வினாடி அவருடைய மனைவி பருவதத் தம்மை, எமகிங்கரன் பெண் வேடத்தில் வந்தால், எப்படியிருப்பானோ அப்படி, முகத்திலே கோபம் கொழுந்து விட்டெரிய, புடவையை வாரி இழுத்துக் கட்டிய வண்ணம், 'பட்டத்து இளவரசனான ராமுவின் காதைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய், 'என்ன அநியாயம், காலையில் போனவன் எங்கெங்கேயோ போய் விளையாடி விட்டு, இப்போ பன்னிரண்டு மணிக்கு வந்திருக்கிறான்; ஒரு கண்டிப்பா, சிரத்தையா ஒன்றுமே கிடையாது, உங்களிடம். இப்படி விட்டுவிட்டால் அவன் என்னத்துக்கு ஆவான்?' எனறாள. என்ன கோபம், ஆத்திரம்! - அந்தக் குரலிலே தான் எவ்வளவு சக்தி! - ரசம் சாதத்துக்குக்கூட அவ்வளவு பலம் இருக்க முடிகிறதே! ராமசாமிப் பிள்ளை இந்தத் திடீர்ச் சம்பவத்தின் விளைவாய்க் கலங்கிப் போய்விட்டாரா?