பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இல்லை; வேதனையுடன் தம் அருமைக்குமாரனை, பெற்றோர்களின் அன்பைச் சிறிதளவேனும் கண்டறியாது எப்போதும் அடி - வசைக்கு உள்ளாகி வந்த அந்தச் சிறுவனைப் பார்த்தார். ஆ, அந்த முகம்! அந்த மூக்கு அந்தக் கண்கள்! - எவ்வளவு அழகாயிருக்கிறான் அவன்! யாரோ ஒர் அறிஞர், 'குழந்தைகள் பூலோகத்திலுள்ள ஜீவ மலர்கள் என்று கூறியது ரொம்பவும் உண்மையாய்த்தானிருக்கிறது. ஆனால், அழகிய அம்மலர்கள் நல்ல மண்ணில், அதாவது செல்வக் குடும்பங்களில் பிறக்கவேண்டும்; இல்லாவிடில் வாடி வதங்கிப் போய் விடுமல்லவா? பிள்ளை சற்றுநேரம் வரை அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தபிறகு, அருகே அவனை அழைத்துத் தம் கைகளால் அனைத்து ஒரு முத்தமிட்டார். இதைப் பார்த்ததும் பருவதத்தம்மைக்குக் கோபம் ரொம்ப அதிகமாய்விட்டது. 'இதென்ன இது! ஊரெல்லாம் சுற்றிவிட்டு வந்திருக்கிறான். ஒரு வார்த்தை அவனைக் கண்டிக்கச் சொன்னால், கொஞ்சி முத்தமிடுகிறீர்களே?' என்றாள் பூரீமதி அம்மை. பூரீமான் பிள்ளை ரொம்ப அமைதியாய், 'இதோ பார், அவனை நாம் ஒன்றும் செய்யக் கூடாது. அவனுக்கு நாம் என்னென்ன தின்பண்டங்கள் வாங்கிக் கொடுக்கிறோம்? எத்தனை சட்டை - வேட்டிகள் வாங்கிக் கொடுத்து அலுத்துப் போய்விட்டோம்? எத்தனை டிராமாவுக்கும் சினிமாவுக்கும் அழைத்துக் கொண்டு போகிறோம்? அவனுக்கு இப்போது இலவசமாய்க் கிடைப்பது விளையாட்டு ஒன்றுதான். அதையாவது அவன் திருப்தியடையும் வரை அனுபவித்து விட்டுப் போகட்டுமே!’ என்றார். அக்டோபர், 1954