பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 'மனுசனா! நன்னாச் சொன்னே மகாராஜா, நன்னாச் சொன்னே!' அய்யரைச் சுற்றி நின்றுகொண்டிருந்த குழந்தைகள் 'கலீரென்று நகைத்தன. கக்கையாவின் முகம் சிவந்தது. அவன் சரேலென்று வெளியே போய்விட்டான்! அய்யருக்கு நிலை கொள்ளவில்லை. ரத்தம் தலைக்கேறி விட்டது. ஒரு தோட்டிப் பயல்’ தன்னை அவமதித்து விட்டானே என்று நினைக்க நினைக்க அவருடைய உயர்ந்த ஜாதி உள்ளம்’ துடியாய்த் துடித்தது. சரமாரியாகக் கூப்பாடு போட்டார்; இருபத்துநான்கு மணி நேரத்தில் அவனுடைய வேலையைத் தீர்த்துக் கட்டி விடுவதாக அவன் தலை மறைந்த பிறகு சபதம் செய்தார். அன்று வேலையே ஒடவில்லை அவருக்கு; பேசாமல் 'ஈஸிசே'ரில் சாய்ந்து விட்டார்!

  • *్మతి *్మ

மணி பத்தரை. அய்யர் பஸ் நிலையத்தில் நின்று கொண் டிருந்தார். புகையிலை ரஸத்தைத் துப்புவதற்காக 'டிப் டாப்"புடன் அங்கே நின்று கொண்டிருந்தான் கக்கையா! தன்னிடம் மன்னிப்புக் கேட்கத்தான் அவன் வந்திருக் கிறான் என்று எண்ணிக் கொண்டு அய்யர் சற்று விறைப்பாக நின்றார். பஸ் வந்தது; கக்கையா முதலில் ஏறிக்கொண்டான். அவனைத் தொடர்ந்து அய்யர் ஒரு காலைத் தூக்கிப் பஸ்ஸில் வைத்தார். ஸார், இடமில்லை - ஏறாதீங்க!' என்று சொல்லி விட்டான் கண்டக்டர். மறு நிமிஷம் பஸ் நகர்ந்தது. வண்டி போகிறபொழுது பக்கவாட்டு nட்டில் 'என்ன ஸார், அப்படிப் பார்க்கிறீங்க?" ‘'வேறே ஒண்னுமில்லே, இவ்வளவு பெரிய ஆபீஸ் கட்றதுக்கு எத்தனை குமாஸ்தாக்களின் எலும்பை நொறுக்கி அஸ்திவாரமாப் போட்டிருப்பாங்கன்னு பார்க்கிறேன்!” கக்கையா ம-இ-4