பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயோ, கமல்! சாது” என் அன்பே, உன் கடிதம் - அல்ல, உன் காதல் கீதம் - எனக்குக் கிடைத்தது. உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளையெல்லாம் ஒருருவாக்கி எனக்கு நீ அனுப்பி விட்டாய்! அன்பின் சிகரமே! இப்பொழுது நான் பாடப்போவது கனவில் பாடும் காதல் கீதம் அல்ல; நனவில் பாடும் வாழ்க்கைக் கீதம்! - அது உனக்குத் தென்றலாக இருக்காது - ஏன் தெரியுமா? என்னுடைய நினைவால் நீ உன்னை மட்டுமல்ல; உலகத்தையே மறந்து விட்டாய்! வருங்காலத்தைப் பற்றி நினைக்கக்கூடச் சக்தியற்றுப் போய் விட்டாய்! இந்தப் பலவீனத்துக்குக் காரணம் நீ என்மேல் கொண்ட காதல் பைத்தியம்! - ஆம் கமல், நீ என்மேல் கொண்ட காதல் பைத்தியந்தான் அதற்குக் காரணம்! இதனால் நீ சிந்திக்காவிட்டாலும் நான் சிந்தித்தேன். அந்தச் சிந்தனையின் போக்கு என்னைக் கடைசியாக ஒரு முடிவிற்கு வரச் செய்தது. அதனால்தான் என்னை மறந்துவிடு, பிரிந்துவிடு!” என்று நான் முந்திய கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால் அதை நான் மசியினால் எழுதவில்லை; கீறல் விழுந்த என் இதயத்திலிருந்து கசிந்த ரத்தத்தில் தோய்த்து எழுதினேன். அதை நீ உணரவில்லை; உணர்ந்திருந்தால் என் அங்கத்தின் அழகுகள் அத்தனையையும் அறிந்து அனுபவித்திருக்கும் நீ என் அகத்தின் வேதனையையும் அறிந்து அழுதிருப்பாய்! என் இன்பமே! ஜாதி மதம், உற்றார் பெற்றார், ஊர் உலகம் என்ற ஆறு பாசக் கயிறுகள் என்னை இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பதாக