பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 யோகமாயிருக்கும்!' என்று படாதிபதி தலையில் அடித்துக் கொண்டார். - நவம்பர் 1954 மூன்றாம் அத்தியாயம் கழுதையும் நாயும் காரைக் கொண்டுவந்து வாசலில் நிறுத்திவிட்டுப் படாதிபதி பத்மனாபனை எதிர்பார்த்தபடி நின்றான் ஓ.கே. அப்போது பத்துப் பதினைந்து ஜதை பர்மா பாதரட்சைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அவனுக்கு எதிரே வந்தான் ப்ரொடக்ஷன் மானேஜர் பீதாம்பரம். 'இவ்வளவு சிரமம் உங்களுக்கு ஏன் ஐயா, யாராவது ஒரு பையனிடம் கொடுத்தனுப்பி யிருக்கலாமே?” என்றான் ஓ.கே. 'அது எனக்குத் தெரியும்; நீ போ அப்படி!' என்று அவனை அதட்டிக்கொண்டே. பீதாம்பரம் காரின் கதவை நெருங்கினான். ஒ.கே. இருந்த இடத்தை விட்டு அசையாமல், 'தெரிந்தால் சரி!' என்று சொல்லிவிட்டு அவனை ஒரு தினுசாகப் பார்த்தான். 'போகிறாயா, இல்லையா?” 'எங்கே போக வேண்டும் என்று சொன்னால்தானே போவதற்கு?’’ 'உன் nட்டுக்கு!' என்று வெறுப்புடன் சொல்லிக் கொண்டே, அவனைத் தன் தோளால் கொஞ்சம் நெட்டித் தள்ளிவிட்டுப் பாதரட்சைகளைப் பின் nட்டில் பயபக்தியுடன் வைத்தான் பீதாம்பரம். 'தேவலையே, பரதன் ஒரு ஜதைக்குப் பட்டாபிஷேகம் நடத்தினால் நீங்கள் ஒன்பது ஜதைக்குப் பட்டாபிஷேகம் நடத்துகிறீர்களே?' என்றான் ஓ.கே. 'அது என் இஷ்டம்; நீ போய் உன் வேலையைப் பார்!’ 'என் வேலையைத் தவிர, பிறர் வேலையில் நான் எப்பொழுதுமே தலையிடுவதில்லை.” 'கதவுக்கருகே நிற்பதா உன் வேலை?” "ஆமாம். 'இல்லை; கார் ஒட்டுவதுதான் உன் வேலை!'

  • 9