பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மனிதன் எங்கே செல்கிறான்?


வழி காட்டியுள்ளன. அப்பரும் ஏசுவும், வள்ளுவரும் முகமதுவும், புத்தரும் காந்தியும் காட்டிய வாழ்க்கை வழியே மனிதனை மனிதனாக வாழ வைக்கும் வழி. மனிதன் - இன்னும் தன்னிலையிலிருந்து அடியோடு தவறிவிடாத மனிதன் - சற்று நின்று நினைத்துப் பார்ப்பின், அவர்கள் வரையறுத்த நல்வழி அவன் கண்ணுக்குப் புலப்படுமன்றோ ? ஆனால், அவன் நிற்பதுமில்லை ; நினைப்பதும் இல்லை. எனவேதான் அழிவுப் பாதையில் அவன் விரைந்து முன்னேறுகின்றான். அவன் சற்று நிற்க வேண்டும் - நின்று நினைக்க வேண்டும் - என்பதே நம் விழைவு. நின்றால் நலனுண்டு ! அன்றேல், யாது நிகழும் என்பதை யாரே கூற உல்லார்!