பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மனிதன் எங்கே செல்கிறான்?


மக்கள் என்றும் மறவாது கொண்டாட வேண்டிக் கொண்டானென்பதும், அவனது இறுதி வேண்டு கோளுக்கு இசைந்த கண்ணன் இந்நாளை விழா நாளாக ஆக்கினன் எனபதும் மரபு பற்றிய வழக்கு.

இங்குக் கொடியவனது விழைவுக்கும் அருள் செய்த அருளாளன் கண்ணது பிறப்பினை எண்ணும்போது திருமாலின் பிற அவதாரங்களும் நம் மனக்கண் முன் தோன்றுகின்றன. அடியவர் அல்லல் நீக்க, காத்தற் கடவுளாகிய திருமால், அவ்வப்போது இவ்வாறான அவதாரங்கள் கொண்டார் என்பர் புராண நூலார். ஆய்வாளர்களோ, திருமாலின் பத்து அவதாரங்களும் உலகின் உயிர்த் தோற்ற வளர்ச்சியை விளக்கும் தன்மையன என்ற முடிபு காண்கிறார்கள். உயிர் மனிதவைதற்கு முன்பு எத்தனையோ மாறுபாடுகளைப் பெற்றுப் ‘புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய்ப்’ பன்னெடுங்காலம் இருந்து, அறிவு ஒவ்வொன்றாய் நிறைவுற்றுப் பின் குறையற்ற மனிதனாகிய , நிலையினையே இத்திருமாலின் தசாவதாரங்கள் விளக்குகின்றன என்பர் அறிஞர். புராணங்களை வேண்டா வென்று கூறுகின்றவர்களுக்குங்கூட இவ்விளக்கம் பயன் தரும் என்பது உறுதி.

இவ்வாராய்ச்சிக்கு ஏற்பத் திருவாசகத்தில் மணி வாசகர், உயிராகிய தாம் பெற்ற நிலைகளை யெல்லாம் அடுக்கி அடுக்கிக் கூறுகின்றார்.

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்’

என்று தம் உயிர் பெற்ற மாற்றங்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்துக் கூறுகின்றார். இவர் தம் கூற்று,