பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது கலாசாரம்?

31

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் அறியும் ஆற்றல் பெறுகின்றான். ஆம் ! அவற்றின் வேறுபாட்டை அறிந்து அவற்றின் பிறப்பிடம் காணும் நிலையிலேதான் அவன் பண்பாடு உச்ச நிலையை அடைகின்றது. அவற்றையெல்லாம் தொகுத்துக் கணியன் பூங்குன்றனர் சில அடிகளில் நம் உளங்கொள நமக்கு விளக்குகின்றார்.

மனித வாழ்வில் நன்மையும் தீமையும் நிறைந்துள்ளன ; வயாவும் வருத்தமும், சோர்வும் தளர்ச்சியும், அவற்றின் நீக்கமும் அமைந்துள்ளன. செத்துமடிதலும் யாரும் தடுக்க முடியாத ஒன்றாகியுள்ளது. வாழ்வின் இனிமையும், இன்மையும் வெளிப்பட்டுக் காண்கின்றன. இவையெல்லாம் கலந்ததே வாழ்க்கை என்று கூறலாம். இவற்றை ஏற்று அமைதிபெறும் நல் உள்ளமே பண்பட்ட உள்ளமாகும்.

இன்பம் வருங்கால் தன்னை மறந்து தருக்கி வாழ்தலும், துன்பம் வருங்கால் அத்துன்பம் பற்றி நொந்து வாடுவதோடு, அத்துன்பம் வரக் காரணமாயிருந்த மற்றவர்களைத் தேடிப் பதிலுக்குத் துன்பம் செய்தலும் இன்று மனிதன் வாழ்வின் கொள்கைகளாய் உள்ளன பிறருக்குத் துன்பம் இழைத்து அவர் வாடத் தான் மகிழும் அளவுக்கு மனிதன் மிருகமாகி வருவதைக் கண் கூடாகக் காண்கின்றோம். இந்த மிருகத்தனம் எந்தக் கலாசாரத்தையும் இல்லையாகக் செய்யும். ஆனால், சற்று மனித உள்ளத்தோடு பூங்குன்றனார் தம் பொன் எழுத்துக்களை ஏட்டிலன்றி மனத்தில் எழுதிப் பார்த்தால், எது கலாசாரம் என்பது விளங்கும், இன்பமும் துன்பமும் கலந்த இவ்வுலக வாழ்வில் அவ்வின்ப துன்பங்கள் யாரால் உருப்பெறுகின்றன என்பதைக் காட்டுகின்றார் அவர். தீதும் நன்றும் பிறர் தர வாரா; என்ற அடியால் ஒவ்வொருவரும் பெறும் தீமையும்