பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மனிதன் எங்கே செல்கிறான்?


கொன்று குவிக்கும் ஆயுதங்களை வளர்க்கும் பெரிய அரசாங்கங்களும் நாம் காண்பன அல்லவா? ஆம்! இத்தகைய கொடுமைகளெல்லாம் எதனால் விளைகின்றன? தமிழன் அன்று கண்டு காட்டிய சமரச ஞானத்தை மனி தன் மறந்தமையே இவற்றிற்கு முதற் காரணம்.

கடைச்சங்க காலத்தில் மட்டுமன்றி, இன்று வரை தமிழ் நாட்டில் அச்சமரச ஞானத்தை உணர்த்தி வருகின்ற புலவர் பல்லோர். காவியம் பாடினும் வேறு எந்த வகையான இலக்கியம் பாடினும் அவற்றுளெல்லாம் அச்சமரச ஞானம் விளங்குவதை அறியலாம். வாழ்விலும் வாழ்வின் அடிப்படையாக அமைந்த பொருளாதார நிலையிலும் அச்சமரசம் நன்கு விளக்கப்படுகின்றது. சங்க காலத்தில் பெற்ற பொருளை மற்றவருக்கும் உதவும் நெறி நன்கு பேசப்படுகின்றது. வறுமையில் வாடிய புலவர் வளம் பெற்ற காலத்து, அதைத் தமக்கென வைத்துக் கொள்ளாது எல்லோருக்கும் வாரி வழங்கக் கொடுத்த பொருளாதாரச் சமரசம் நாம் இன்று கைக்கொள்ள வேண்டிய ஒன்றன்றோ? குமணன் நல்கிய வளனைக் கொண்டு வந்து தம் வாழ்வரசியிடம் கொடுத்த பெருஞ் சித்திரனார்,

‘இன்னோர்க்கு என்னாது என்னொடும்
சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது

எல்லார்க்கும் கொடுமதி மனைக்கிழ வோயே!

என்று கூறும்போது நாம் வியவாதிருக்க முடியுங்கொல்! கடவுளைப் பாட வந்த இடைக்காலப் புலவராகிய திருநாவுக்கரசர். ‘வைத்த பொருள் நமக்கு ஆம்’ என்று நெஞ்சத்துக்கு அறிவுறுத்தி அளவுக்கு மீறிய பொருளீட்டும் கெட்ட எண்ணத்தைக் கெடுக்கவில்லையா? கோசலை நாட்டைத் தம் சமரச உணர்வால் கனவு காணும் கம்பர், ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்