பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மனிதன் எங்கே செல்கிறான்?


டாகும் பயனை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. எண்ணினால், பலன் விளையும்.

‘கல்வி நிலையங்கள் ஒழுக்கக் கூடங்களாக வேண்டும்,’ என்று பலரும் பேசுவது காதில் அடிக்கடி விழுகின்றது. அதற்குக் கல்வி நிலையங்களை நடத்துபவரும், கல்வித் தலைவர்களும் முன்னின்று செயலாற்ற வேண்டும். முன் கூறியபடி வள்ளுவருக்கு மாநாடு நடத்தி அவர் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலேதான் இன்றைய கல்வி செல்லுகின்றது. வள்ளுவர் வகுத்த ஒழுக்க நெறி தவறாதவர்கள் மேலிருந்து மற்றவர்களுக்கு வழி காட்டிகளாக அமையின், நாட்டுக் கல்வி சீர்பெற்றுத் திகழும்.

நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் பின்புறம் இரண்டு ‘பெரிய மனிதர்’ உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் தாம் என்பதை அவர்கள் பேச்சு உணர்த்திற்று. மாணவர்களுக்குக் கொடுக்க அவர்களிடம் கொடுக்கப்பட்ட ‘டிக்கெட்டு’கள் பலவற்றை மணவருக்குக் கொடாது தாங்களே வைத்துக் கொண்டு, வேண்டியவருக்குக் கொடுக்க அங்கு வரச் சொல்லி, அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது ஏமாந்த அவர்கள் பேச்சு, அவர்களை ஒரு பள்ளி ஆசிரியர்கள் என் பதை எடுத்துக் காட்டிற்று. அம்மம்மா! அரங்டு நடுவில் செல்லும் மகளிரைப் பற்றிய அவர்கள் பேச்சுக்கள் படிக்காத அநாகரிகனும் நினைக்காத பேச்சுக்கள். ஆம்! பேசியவர் யார்? மாணவர்களுக்கு ஒழுக்கம் பயிற்றும் உயர்ந்த ஆசிரியராகிய ‘ஞானபோதகர்’, இந்த நிலை நாட்டில் நிலவும் வரையில் கல்வி உருப்படுமா? இப்படிக் கூறுவதனால் எல்லா ஆசிரியர்களும் ஒழுங்கற்றவர்கள் என்று நான் கூறவில்லை; ஆசிரியருள் ஒரு சிலர் இப்படி இருக்கின்றனர் என்பதையே காட்டினேன்.