பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யறிவு

61


நீதி மன்றங்கள் புதிது புதிதாகக் தோன்றுகின்றன ? பாவம்! தோன்றிய அத்தனையும் வரும் வழக்குகளின் எண்ணிக்கையைக் கண்டு செயலாற்ற முடியாமல் திகைக்கின்றன. ஏன் இந்தக் கொடுமை? தனி மனிதனின் பகைமை அன்றோ இதற்குக் காரணம் ?

தனி மனிதன் தான் அவ்வாறு என்றால், வீட்டுக்கு வீடும் நாட்டுக்கு நாடும் பகைமையற்று வாழ்கின்றனவா? இல்லையே! இனப்போராட்டமும், மொழிப்போராட்ட மும், சமயப் போராட்டமும், சாதிப் போராட்டமும் இந்த இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட நாகரிக உலகில் இன்று நாம் காண்கின்றவைதாமே? இக்கொடுமைகள் எதனால் நிகழ்கின்றன? இவற்றை நடத்துகின்றவர் யார்? படிக்காதவர்களா? படித்தவர்கள் தாமே? எனினும் இவர்களை அறிவற்றவர்கள் என்று தானே கூற முடியும்?

உலக அரங்கந்தான் என்ன வாழ்கின்றது? இந்திய நாட்டுக்கு ரஷ்யத் தலைவர்கள் வந்து சென்றால், அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் குலை நடுங்கிச் சீறுவானேன் ? நான்கில் ஒரு பகுதி மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டுக்கு உலக அரங்கில் இடமில்லாதிருப்பானேன் ? ஆம்! காரணம்? ஒரே காரணந்தான்! வள்ளுவர் காட்டிய மெய்யறிவை, கற்றவரெனத் தம்மைப் போற்றிக்கொள்ளும் உலகத்தவர் அறியாமை தான் அக்காரணம்.

ஆம்! உலகம் வாழ வேண்டுமாயின், வள்ளுவர் காட்டிய அம்மெய்யறிவை மேற்கொள்ளுவதன்றி வேறு வழியில்லை. மனிதனை மட்டும் ஒத்து நோக்கி வாழ்வதோடு நம் வாழ்வு அமையாது என்பதை வள்ளுவர் மற்றொரு குறளில் விளக்குகின்றார். எல்லா உயிரையும் ஒத்து நோக்க வேண்டிய கடப்பாட்டுடன் நாம் வாழ