பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மனிதன் எங்கே செல்கிறான்?



டாக்கப்பட்டுள்ளன! ஒரு புறத்தே 'நாங்கள் உரிமைக்குப் பாடு பட்ட காரணத்தால் ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும்' என்று போர்! மற்றொரு புறத்தில் உண்மையிலே பாடுபட்டு, உழைத்து, விடுதலையைத் தேடித்தந்த நல்லோர்கள் கேட்பாரற்றுக் கிடக்க, அன்று ஆங்கில அரசருக்குத் துணையாயிருந்த பெரியவர்களையெல்லாம் அழைச்துச் சட்டங்கள் செய்யவும், பட்டங்கள் ஆளவும் சொல்லவில்லையா? ஜனநாயக வாழ்வு தேவை என்று பறை சாற்றிக்கொண்டே அந்த ஜனநாயகத்தைப் படுகுழியில் புதைக்கும் தலைவர்களுக்குத்தான் பஞ்சமா?

அனைத்தையும் தனி உடைமையற்ற அரசாங்கப் பொது உடைமையாக்கி மக்களுக்கு நன்மை செய்வோம்,' எனக் கூறிக்கொண்டே அப் பொதுஉடைமைச் செயலால் மக்களுக்கும் அதில் பணியாற்றுவோருக்கும் எல்லையில்லாத் தொல்லை தரும் நல்ல பணிகளைத்தான் காட்டாதிருப்போமா? உண்ண உண்வற்று எண்ணற்ற மக்கள் பட்டினியால் வாடி மடிவதைக் கவனியாது, அவர் தம் வாட்டம் தீர்க்க வழி காணாது. ஊரையும் பேரையும் பற்றிப் பெருங் கலாம் விளைக்கும் தலைவர்களையும், அவர்களை எப்படியாவது அடித்து ஒழிக்க வேண்டும் என்ற ஆணையாளரையும் காட்ட முடியுமே!' என்று அரசியல்வாதி கூறுவான்.

ஆம்! இப்படியே ஒவ்வொரு துறையிலும் காட்டிக் கொண்டே போகலாம். அந்தப் பாரதியார் உரிமை நாட்டில் பெற விழைந்த எத்தனையோ இன்று பெறப் படாமல் உள்ளன. பெற வேண்டுவதைப் பெற முடியாவிட்டாலும் கவலையில்லை. சமூகத்துக்கே கொடுமை இழைக்கும் எத்தனையோ பேர், நாட்டில் பெறத்தேவையற்ற ஆணையுடன் உலவுகின்றதைக் காணத்தான் உள்ளம் நடுங்குகிறது! கண்ணீரையும் செந்நீரையும்