பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வந்தால்

79



'வந்தால் என்ன? வறுமைக்குக் குறைவா? அவர் காலத்தில் இருந்ததைக்காட்டிலும் பிச்சை எடுக்கும் பெருங்கும்பல் அதிகரித்துள்ளதைக் காட்ட முடியாதா? சாதி வேண்டாவென்று கூறிக்கொண்டே, தனித்தனிச் சாதிகளின் மகா நாடுகளைக் கூட்டி அவற்றால் தாமே பயன் பெற்று, அவரவர் சாதியையும் அதன் மூலம் உண்டாகும் வெறியையும் வளர்த்துக்கொண்டிருக்கும் வாய்வீரரைக் காட்ட முடியாதா? எழுத்தில் எல்லோரும் ஒன்று என்று எழுதி வைத்து, ஊர்தோரும் சேரிகளை வளர்த்து வரும் சீர்திருத்தவாதிகளுக்குத்தான் பஞ்சமா? 'பேசும் படங்கள், நாடகங்கள் மூலம் கலையையும் சமயத்தையும் வளர்க்கின்றோம்!' என்று பறைசாற்றிக் கொண்டே, மற்றவர்களைப் பழிப்பதையே தம் தொழிலாகக் கொள்ளும் கலைவாணர்களைக் காட்ட முடியாதா? சாவடியும் சத்திரமும் கோயிலும் பள்ளியும் ஏழைகள் பொருட்டு இனாமாகக் கட்டித் தருவதாகச் சொல்லி, அதற்கு வேண்டிய பொருள்களைப் 'பர்மிட்டு' மூலம் பெற்று, அவற்றை ஒன்றுக்கு மூன்றாக விற்று, தருமம் செய்வதாகக் கணக்கிடும் தொகையைக் காட்டிலும் பன்மடங்காகப் பொருள் பெருக்கும் பெரிய மனிதர்களுக்குத்தான் நாட்டில் பஞ்சமா? செய்யத் தகாத கொடுமைகளை யெல்லாம் செய்துவிட்டு, அக்கொடுமை கள் மறைய ஆண்டவனுக்கு வைரமுடி சாத்தி மறைக்கும் பெருஞ்செல்வர்களுக்குத்தான். நாட்டில் குறைவா?' என்று சமூக சீர்திருத்தவாதி ஒரு புறம் கேட்கலாம்.

வந்தால் இதோ, அரசியலிலேதான் எத்துணைச் சீர்திருத்தங்கள்! உலக அரங்கத்தில் எத்தனை முன்னேற்றம்! எவ்வளவு திட்டங்கள் ஏட்டில் தீட்டப்பட்டுள்ளன! எவ்வளவு உத்தியோகங்கள் அதிகரித்துள்ளன! வேண்டியவர்களுக்கு, வேண்டிய உத்தியோகங்கள் தரப் புதுப்புது பிரிவுகள் எத்தனை உண்-