பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மனிதன் எங்கே செல்கிறான்?



பாரும் வாழ்வதைக் காண்கிறோம் நாம். ஆனால் ஆழ்ந்தறிந்து நோக்கின், இரண்டுமே உண்மையற்றன என்பன தெளிவாகும்.

'உலகம் எக்கேடு கெட்டால் தான் நமக்கென்ன?' என்று எண்ணித் தருக்கி வாழும் தன்னல வாதியர் இன்று உலகில் மிக அதிகமாக வளர்ந்துள்ளனர். என்னவாயினும் கவலையுறாது, தம் வாழ்வே வாழ்வாகக் கருதி, வளம் பெருக்கி, மற்றவர் வாடத் தாம் வாழும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுவிட்டார்கள் அவர்கள். அவர்கள் பாதை ஒரு திருந்திய பாதையாகக் காணப்படினும், அதில் கல்லும் முள்ளும் நிறைந்திருப்பதை உணர்வுடையார் அறிவர். ஒரு சிலர் உலகை நோக்கி வருந்திக் கூறி, அவ்வுலக முன்னேற்றம் கருதியே தாம் அல்லும் பகலும் அனவரதமும் பாடு பாடுவதாகக் காட்டிக்கொண்டே, அவ்வுலகில் வாழும் ஏழைகளை ஏமாற்றிப் பொன்னையும் பொருளையும் பெருக்கித் தம்மையும் தம்மைச் சேர்ந்தோரையும் வளர்த்துக்கொள்ளுவர். இவர்களைத் தவிர மற்றொரு சாரார், பசி பட்டினி என்று ஏழை மக்களிடம் பேசி, அவர்களிடமிருந்தே 'சந்தாத் தொகை' வாங்கிக்கொண்டு, அந்தப் பணத்திலேயே பட்டமும் பதவியும் பெற்றுப் பணக்காரர் ஆனதையும் பார்க்கிறோம். இவர்களாலெல்லாம் நாட்டுக்கு நன்மையா தீமையா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். இந்த உணர்ச்சி அற்ற மரக்கட்டைகளால் உலகுக்குத் தான் பயன் உண்டா என்று சிந்திக்கவேண்டும். ஆம்! சிந்திப்பின், முடிவில் உயர்ந்த உண்மை தோன்றாமல் போகாது.

ஒருவர் தம் நண்பரைக் கண்டு ஏதேதோ பேசிச் சிறிது உதவியும் பெற்று வரவேண்டுமென்று திட்டமிட்டார்; வீட்டை விட்டுப் புறப்பட்டு, நண்பர் வீடு