பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றுமிலை

87



போய்ச் சேர்ந்தார். நண்பர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்; இவரைக் கண்டதும் 'வருக' என்று வரவேற்றார்; வந்த காரியம் என்ன என்று கேட்டார். இவர்- எவ்வளவோ சொல்லி, ஏதேதோ பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவர் -'ஒன்று மில்லை; - சும்மா இப்படி உங்களைப் பார்த்து விட்டுப் போகத்தான் வந்தேன்' என்றார். நண்பரோ, இவரை விடவில்லை; 'சும்மா வருவதாவது! ஏதாவது காரியம் இருந்தால்தானே நீங்கள் வருவீர்கள்?' என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். வந்தவரும் முதலில் ஏதோ உலக விஷயங்கள் பேசுவதுபோல ஆரம்பித்தார்; கொரியாச் சமாதானம் தொடங்கிக் கொத்தவாற்சாவடிப் பலசரக்கு விலைகள் வரையில் பலப்பல பேசிக்கொண்டே சென்றார். நண்பருக்கு இதுபோன்ற பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பது பழக்கம். எனவே, அவரும் சளைக்காது கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக இவரும் தம் குடும்பத்தைப் பற்றிக் கூறி, தனக்கு வேண்டிய, பொருள்களைக் கேட்டுவிட்டார். நண்பர் நகைத்து 'ஐயா' உங்கள் 'ஒன்றுமில்லை'யில் இவ்வளவும் அடங்கியுள்ளதே! கொரியாவும் கொத்தவாற்சாவடியும், வீடும் பொருளும் யாவும் அடங்கியுள்ளனவே!' என நகைத்து, இவருக்கு வேண்டியதைக் கொடுத்தனுப்பினார்?.

இந்த 'ஒன்றுமில்லை'யைப் போல உலகில் எத்தனை பேர் ஒன்றுமில்லை என்று பேசுறார்கள்! அவர்தம் ஒன்றுமில்லா வாழ்வில் எத்தனையோ உண்மைகள் பொதிந்துகிடக்கும். ஏன்? உலகமே... அதிலுள்ன பொருள்கள் யாவுமே-பஞ்ச பூதங்களே - இந்த ஒன்றுமிலாச் சூனியப் பரவெளியிலிருந்து