பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதன் எங்கே செல்கிறான்?



 

னிதன் தோன்றிய நாளைக் கணக்கிட முயன்று வரும் ஆராய்ச்சியாளர், எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவன் தோன்றியிருந்திருக்க வேண்டும் என்று முடிவு கூறுகின்றனர். இன்றைய மனிதனது வாழ்நாள் நீண்ட உலக வாழ்நாளில் ஒரு நொடி. ஏன்? மனித இனத்தின் காலமே பரந்த அண்ட கோள ஆயுட்காலத்தின் ஒரு நொடியேயாகும். அளப்பருந்தன்மை வாய்ந்த அண்ட கோளத்தின் ஆயுளில் ஒருநொடிக் காலமே மனித இனத்தின் காலம் என்றாலும், மனிதன் அந்த அண்டகோள எல்லைகளையெல்லாம் அளக்கும் ஆற்றல் பெற்று விட்டான் என்பதை அறிகின்றோம்.

மனிதன் மற்றவைகளை அடக்கியாளும் அறிவு பெற்றதுகொண்டு, அவனே மற்றெவற்றினும் உயர்ந்தவனானான். தோற்றக் காலத்தில் இருந்த மனிதன் பல வகையில் இன்றைய மனிதனிலும் வேறுபட்டிருப்பான்