பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் ஊழியர் 



 

'எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழியே நிலனே!' என்பது பழங்காலப் புலவர் வாக்கு. நாட்டு மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்களோ அவ்வாறே நிலமும் சீர்பெறும். அதாவது, மக்களது வாழ்க்கை முறை, பண்பாடு, ஒழுக்கம், கலை நலம் முதலியவற்வைக் கண்டே ஒரு நாட்டை உலகத்தார் உயர்த்திப் போற்றியும் தாழ்த்திப் பேசியும் அந்நாட்டின் நிலையை வரையறுப்பர். எனவே, ஒரு நாடு நல்ல நாடு என்று உலகத்தோரால் புகழப்பட வேண்டுமாயின், அதில் வாழும் மக்கள் அனைவரும் நல்லவராகவே இருக்கவேண்டும்.

நாட்டு மக்கள் என்பவர் யாவர்? அவர்கள் அந் நாட்டில் நிலைத்து வாழும் குடிகளாவர். அவர்கள் நன்கு வாழ வேண்டுமாயின், அதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது யாது? நல்ல அரசாங்கம். ஆம். ஆளும் தலைவர்கள் நல்ல நேரிய வழியில் நடந்-