பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றுமிலை

91



உண்மையைக் காட்டுகிறார். அதை அவர் வாக்கிலேயே பார்ப்போம்:

'மணமகனே பிணமகனாய்
மணப்பறையே பிணப்பறையாய்
அணியிழையார் வாழ்த்தொலிபோய்
அழுகையொலி யாய்க்கழிய,
கணமதனில் பிறந்திறும்இக்
காயத்தின் வரும்பயனை
உணர்வுடையார் பெறுவர்; உணர்

ஒன்றுமிலார்க்கு ஒன்றுமிலை.'

என்ற பாடலில் அவர் காட்டிய உண்மையை உணர்வுடையார் அறிவர்; அல்லாதார்க்கு அது ஒன்றுமிலாப் பாட்டாகத்தானே தோன்றும்? ஆம்! இந்த உண்மையை உணர்ந்தவராகி உலகில் தன்னலமற்று உழைப்பவரே மக்கள் ஊழியர் ஆவர்-மற்றவர் யாரோ?