பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மனிதன் எங்கே செல்கிறான்?



கனவிடைத் தோன்றி, மறுநாள் அம்மதுரையின் நகரின் புறத்தே வணிகர் வீதியில் நடைபெறும் மணத்தில் மாறுவேடத்துடன் அவனையும் மறையவனையும் வந்திருக்கப் பணித்தார். இறைவர் மொழிப்படி மன்னவனும் மறையவனும் மண வீட்டில் மறைந்திருந்தனர்.

மண வேளை வந்தது. மங்கல நாண் புனையும் நேரம் நெருங்கிற்று. மற்றவர்களுக்குத் தெரியாது மன்னவனும் மறையவனும் காணுமாறு இயமன் தூதுவர் தோன்றினர். ஒருவன், 'மணமகன் உயிரை இம்மங்கல நிகழ்ச்சிக் கிடையில் எவ்வாறு கொண்டு செல்வது?' என்றான். மற்றவன், 'அதில் ஒன்றும் கடினமில்லை. அன்றொரு நாள் மரத்தில் தொத்திக் கிடந்த அம்பினை வீழ்த்திப் பார்ப்பனியைக் கொன்று அப்பழியையும் அருகிலிருந்த வேடன்மேல் சுமத்தியது போன்று, மங்கல ஆரவாரத்தால் மருண்டது போன்று அருகிலிருக்கும் பசுவின் தாம் பறுக்கச் செய்து, அது மணமகன் உடலை முட்ட, அதனால் அம்மணமகன் உயிரைக் கொள்ளலாம்' என்றான். கேட்ட அரசன், 'மறையவனே, கேட்டனையோ?' என்றன். 'அவன் கூறிய நிகழ்ச்சி நடப்பின், தன் மனைவி இறந்ததும் சரி' என்றான் மறையவன். மணமுரசு ஒலிக்க, மங்கல நாண் புனையும் வேளையில் ஒலியால் மருண்டு தாம்பறுந்த பசு மணமகனை முட்ட, அவன் முடிந்தான். அரசனும் பின் மறையவனுக்குப் பொருள் கொடுத்து மற்றொரு மணம் செய்துகொள்ளச் சொல்லி அனுப்பி விட்டு, வேடுவனைச் சிறை மீட்டு, அவனை வணங்கி, 'தெரியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி!' எனவேண்டி, வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பிய பின், உண்மை உணர்த்திய சொக்கநாதரை வணங்கி வழிபட்டான். ஆம்! இது சாதாரணமாக நம்ப முடியாத கதைதான். என்றாலும், இக்கதையின் இடையில் மணமகன் முடிவிலே தான் பரஞ்சோதியார் ஓர்