பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மனிதன் எங்கே செல்கிறான்?



தவோ, அன்றி அரசாங்கத்துக்கு உரிய வரியை வசூல் செய்யவோ, அவர்கள் படும் பாடு சொல்லத் தரமன்று. எனவேதான் அவர்கள் பொறுப்புப் பெரிது என்றேன்.

இத்தகைய பெரும் பொறுப்பு ஏற்று, ஆட்சி மண்டபத்தின் அடிக் கடைக்கல்லாக அமர்ந்த இந்த கெஜட்டுப் பதிவில்லா உத்தியோகத்தர்கள் நன்கு காக்கப்பட்டாலன்றி, எந்த அரசாங்கமும் சரியான பணியை ஆற்ற முடியாது. இந்த உத்தியோகத்தில் உள்ளவர்களுள் பெரும்பாலோர் நடுத்தர வகுப்பினரே; ஒரு சில ஏழைகளும் இருப்பார்கள். இவர்கள் இரு புறத்தும் இடி வாங்க வேண்டியவர்கள். மேலுள்ளார் ஆணையை நிறைவேற்ற வேண்டும்; கீழுள்ள குடிகளின் குறைகளையும் போக்க வேண்டும். ஆகவே, இவர்தம் கடமை பெரிது! பெரிது! மிகப் பெரிது!ஷ

மக்கள் ஊழியர் (Public Servants) என்ற பெயர் உண்மையில் இவர்களுக்குத்தான் பொருந்தும். இவர்கள் மக்களுடன் நன்கு கலந்து பழக வேண்டும். ஒரு சிலர் கிராம மக்களை நன்கு அறிந்து கொள்ளாது. அவர்தம் குறை முடிக்க முடியாது இருக்கலாம். ஆனால், பெரும்பாலோர் உண்மையில் மக்கள் உளமறிந்து நடப்பவர் களாகத்தான் உள்ளனர். அன்றேல், மக்களாட்சியோ மன்னனாட்சியோ நடவாது! உயர்ந்த உத்தியோகப் பதவிகள் ஏற்படா! நாடு நாடாய் இராது! எனவே, இவர்களே நாட்டின் உயிர்-உடல்-எல்லாம். இவர் தம் வாழ்வு திருந்தினாலன்றி, நாட்டு வாழ்வு திருந்தியதாகாது.

மக்கள் ஊழியராகிய இத் திருக்கூட்டத்தார் மாவட்டந்தோறும் கூடுகின்றனர்; மாநில மரநாடும் அமைக்கின்றனர்; குறைகளைக் கொட்டிக் கொட்டி அளக்கின்றனர். கூறவேண்டுபவரிடத்தில் கூறுகின்றனர். எனினும் இவர்