பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் ஊழியர்

97


நாட்டில் எப்படியோ சிறுபான்மையோர் பெயர் கொண்டே பெரும்பான்மையோரை வழங்கும் பழக்கம் வந்துவிட்டது. சிறு பான்மையினரான பிராமணரைக் குறித்து, பெருபான்மையோரைப் பிராமணரல்லாதார் என்று குறிக்கின்றனர். சென்னையின் ஒரு பகுதியாக ஆந்திராவைப் பிரித்து, ஆந்திரா எனப் பெயரிட்டு, மிகுதியுள்ள பரந்த பகுதியை எஞ்சிய சென்னை (Residuary state) என வழங்குகின்றனர். அது போன்றே சிறுபான்மையினராகிய கெஜட்டுப் பதிவாளரைக் கூறி, பெரும்பான்மையினரான மற்றவரை அஃதல்லாதார் என்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும். அவர் வேறு ஒரு நல்ல பெயரால் வழங்கப்பெறின் வரும் குற்றம் யாது மில்லை. ஆளுகின்ற தலைவர்கள் ஆவன செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

சாதாரண உத்தியோகத்தர்களின் பொறுப்புப் பெரிது என்று கூறினேன். மாவட்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் கெஜட்டுப் பதிவு பெற்ற ஜில்லா உத்தியோகத்தர்களுக்கும், மேல் உள்ள ஆணையாளர்களுக்கும் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடைபெறும் நிகழ்ச்சியை அவ்வப்போது ஆய்ந்து அறிவிப்பவர்கள் இவர்களேயாவார்கள். அதைப் போன்றே, அரசாங்க ஆணைகளை அமுலுக்குக் கொண்டுவரும் பொறுப்பும் இவர்களைச் சார்ந்த்து ஆகும். மக்கள் விருப்பமறிந்தோ, அன்றி அறியாமலோ ஆளுவோர் சட்டம் இயற்ற, அதை நாட்டில் அமுலுக்குக் கொண்டு வரவேண்டுமென்று உயர்ந்த உத்தியோகத்தர் உத்தரவிட, அதை மக்களிரிடம் நேருக்கு நேர் நின்று நடைமுறைக்குக் கொண்டு வரும் பொறுப்பு இச்சாதாரண குமாத்தாக்களையும், இவர்களுக்கு நேர் மேலுள்ள தாசில்தார் போன்ற அதிகாரிகளையுமே சாரும். பொதுமக்கள் வம்புக்கும் வசவுக்கும் முன்நின்று ஆட்சியாளர் தம் ஆணையைச் செலுத்