பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 103

நான் வாயைத் திறக்கவில்லை; தலையை மட்டும் கவிழ்த்துக் கொண்டேன்.

உண்மையில் நீ உன் அப்பாவைப் பார்ப்பதற்காகப் போகவில்லை; என்னை விட்டு எப்படியாவது பிரிந்தால் போதும் என்பதற்காகத் தான் போகிறாய்!’

இதற்கு நான் என்ன சொல்ல வேண்டுமென்று இவர் எதிர்பார்க்கிறார்? - இல்லை, உங்களை விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை’ என்று சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரா? அல்லது, அதெல்லாம் ஒன்றுமில்லை; அப்பாவைப் பார்ப்பதற்காகத்தான் போகிறேன்!” என்று நான் இவருக்காகப் பொய் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரா? - ஒன்றும் புரியவில்லை எனக்கு. எனவே, அதற்கும் பேசாமலிருந்தேன்.

‘எல்லாவற்றுக்கும் மெளனம்தானா? - இப்படித் தான் அன்றிரவு நடந்த அந்தச் சம்பவத்தைக்கூட நீ யாரிடமும் சொல்லாமல் மெளனம் சாதித்துவிட்டாய்! - அதற்கு என்ன அர்த்தம்? - நீ என்னை விரும்புகிறாய் என்று அர்த்தமா? இல்லை, விரும்பவில்லை என்று அர்த்தமா?’

இதைக் கேட்டதும், ‘ஆ’ என்று அலறிவிடவேண்டும் போல் தோன்றிற்று எனக்கு. எனினும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டேன் - இந்த ஆண் பிள்ளைகளே இப்படித்தான் இருப்பார்களோ? - இவ்வாறு எண்ணி வெறுப்பும் வேதனையும் உற்றது என் மனம். அதைப் புரிந்துகொள்ளாமல் அவர் தொடர்ந்தார்:

‘பேசு! நறுமணம், பேசு! - பேசாவிட்டால்

உன்னுடைய இதழ்க் கடை யில் எனக்காக ஒர் இளநகையாவது மின்னி மறையட்டும் அது போதும், எனக்கு!’ என்ற சொல்லிக் கொண்டே ஆதுரத்துடன் என்னை நோக்கி, அவர் மேலும் ஒர் அடி எடுத்து வைத்தார்.