பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 123

‘அவனுடைய பாடல்களில் இருக்கிறது? ஆனால் அவன் ஒரு தவறு செய்துவிட்டான்; அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை!”

“என்ன, தவறு, அது?” “பாமரருக்கும் புரியும்படியாக அவன் பாடிவிட்டான்! ‘நல்லதுதானே?” ‘நாசமாய்ப் போச்சு, போ! - ஒரு தமிழாசிரியை இப்படிச் சொல்லலாமா?”

‘ஏன் சொல்லக்கூடாதா?” ‘அடி அசடே பண்டிதருக்கு மட்டும் புரியும்படியாகப் பாடியிருந்தால், அவனுடைய பாடல்களுக்கு நீயும் ஒர் உரை எழுதியிருக்கலாம் இல்லையா?”

‘ஓ, அதற்குச் சொல்கிறீர்களா?” ‘நல்லவேளை, இப்பொழுதாவது புரிந்ததே? இதற்குத்தான் பெண்புத்தி பின்புத்தி என்பது!”

‘நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினர்கள்; நான் இனி மேல் முன் புத்தியோடு இருக்கப் போகிறேன்!”

‘அப்படியென்றால்?” ‘முதலில் கல்யாணம்; அப்புறம்தான் காதல்!” ‘கல்யாணம், கல்யாணம், கல்யாணம் - அந்தப் பாழாய்ப்போன கல்யாணத்தைத்தான் நீயும் ஒருமுறை செய்துகொண்டாய், நானும் ஒரு முறை செய்து கொண்டேனே? இன்னுமா கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்? என்னைக் கேட்டால் அப்படி ஒரு சடங்கே யாருக்கும் தேவையில்லை என்பேன். ஏனெனில், வாழ்க்கையையே எப்பொழுது பார்த்தாலும் ஒரே கதியில் இயங்கும் இயந்திரமாக்கிவிடுகிறது, அது!"