பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 விந்தன்

‘வாசகியா?”

“ஆம், இதோ பார்த்தீர்களா? நேற்றுவரை உங்களுடைய கையெழுத்துக்காக என்னிடம்தவமிருந்த இந்த ஆட்டோகிராப்பை? இன்றுதான் இது முக்தியடையப் போகிறது!"என்று அவருக்கு முன்னாலேயே அதைக் கிழித்து எறிந்து விட்டு நான் நடந்தேன்.

அவர் கடகட'வென்று சிரித்தார்; நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

‘ஏமாந்தாய், நன்றாக ஏமாந்தாய்’ என்றார் அவர். ‘ஆம் நேற்றுவரை; இன்றல்ல!” என்றேன் நான் ஆத்திரத்துடன்.

  • நினைப்பது போல் நான் பேராசிரியர் நெடுமாறனல்ல; அவர் அதோ வருகிறார், பார்!"என்றார் அவர்.

நான் திரும்பினேன்; யாரோ ஒருவர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அதற்குள் எங்களை நெருங்கிவிட்ட அவர், “என்ன வேண்டுமாம், இந்த பெண்ணுக்கு?"என்றார்.

‘உங்களுடைய கையெழுத்து வேண்டுமாம் என்றார் அவர்.

‘அவ்வளவு பெரிய மனிதனாகி விட்டேனா என்ன, நான்?'என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

அவருடைய சிரிப்பு என்னுடைய சிந்தனையைக் கவர்ந்தது. “ஆம், உங்களுக்கு நீங்கள் பெரிய மனிதராக இல்லாவிட்டாலும், எனக்கு நீங்கள் பெரிய மனிதர் தான்'என்றேன் நான்.