பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 விந்தன்

பேராசிரியர்!’ என்று என் அண்ணாவுடன் சண்டை பிடிக்கும்போது?

ஆனால், அண்ணாவைப் பார்க்க வந்த மனுஷன் அவனைப் பார்த்ததோடு போயிருக்கக் கூடாதா? என்னை வேறு பார்த்து, நீயா!’ என்று வேறு கேட்டுப் பல்லை இளிக்கவேண்டுமா? என் அண்ணா என்னைப்பற்றி என்ன நினைப்பான்?. இல்லை, இந்தப் பேராசிரியரைப் பற்றித் தான் என்ன நினைப்பான்.ஒருகணம் இந்தத்தவிப்புக்குள்ளான நான், மறுகணம் என்னை நானே சமாளித்துக் கொண்டு, “என்ன, தமிழாசிரியர் ஐயா! நலமா?"என்றேன்.

‘நலம்தான், நலம்தான்'என்றார் அவர்.

‘இவரை ஏற்கெனவே உனக்குத் தெரியுமா, என்ன?” என்றான் அண்ணா, வியப்புடன்.

தெரியும் அண்ணா: பெங்களூரில் இருந்தபோது இவரை நான் நந்திமலையில் சந்தித்திருக்கிறேன்!”

“எதற்காக?'என் அண்ணா இப்படி ஒரு கேள்வியைப் போட்டானோ இல்லையோ, “வேறு எதற்காக, எல்லாம் கையெழுத்து வேட்டைக்காகத்தான்’ என்றார் பேராசிரியர், என்னைக் கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டே.

‘ஒ, இவருடைய விசிறிகளில் நீயும் ஒரு விசிறியர்?” என்றான் அண்ணா சிரித்துக்கொண்டே.

“ஆம், அப்போது விசிறியாய்த்தான் இருந்தேன்’ என்றேன் நான், என்னை மறந்து.

‘இப்போது அவ்வளவுதான் என்றான் அண்ணா. - எழுந்துநின்ற பேராசிரியர், ‘இப்போது என் விசிறி யாயிருக்க முடியாது, இப்போது என் விசிறியாயிருக்க முடியாது! என்று விசும்பிக் கொண்டே, மறுபடியும் நாற்காலியில் ‘தொப்'பென்று உட்கார்ந்தார் - உட்கார்ந்த