பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 141

என்ன, கல்யானந்தானே?’ என்று என் அண்ணா வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுமாகப் பேசினான்.

‘'அதைத்தான் நானும் சொல்கிறேன், கல்யாணத்துக்குப் பின்னால் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளட்டுமே என்று ?” என்றாள் அவள். ‘எல்லாவற்றையும் என்பதற்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.

இதைக் கேட்டதும் என் அண்ணா என்ன நினைத்தானோ என்னமோ, ‘சேச்சே, அவர் அப்படிப் பட்டவர் அல்ல!’ என்று முகத்தைச் சுளித்தான்.

எப்படிப்பட்டவராகத்தான் இருக்கட்டுமே ஆண் என்றால் ஆண்தான்; பெண் என்றால் பெண்தான் என்றாள் பாட்டி, அப்பொழுதும் விடாமல்.

“சரி, அப்படி என்ன நடந்துவிட்டது, இங்கே?’ என்று அண்ணா கேட்டான்.

‘ஒன்றும் நடக்கவில்லை. நடப்பதற்கு முன்னால் எச்சரிக்கிறேன் - அவ்வளவுதான் என்றாள் அவள்.

அவளுடைய எச்சரிக்கையை நானும் பொருட்படுத்த வில்லை, அண்ணாவும் பொருட்படுத்த வில்லை. அதன் காரணமாக எது நடக்கக்கூடாது என்று அவள் நினைத்தாளோ, அது நடந்துவிட்டது - ஆம், நடந்தே விட்டது!

‘பெண்புத்தி, பின்புத்தி என்பதுதான் எவ்வளவுப் பெரிய உண்மை அந்தப் பின் புத்தி என்னை என்ன செய்தது தெரியுமா? நடப்பதற்கு முன்னால் சிரிக்க வைத்தது; நடந்தபின் அழ வைத்தது - ஆம், நான் அழுதேன்; அழுதே விட்டேன்!