பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 143

என்ன செய்வேன், ‘ஏன் அண்ணா, அவரைப் பார்த்தாயா?” என்று ஒருநாள் வெட்கத்தைவிட்டு அவனைக் கேட்டேன்.

‘இல்லையே!’ என்று கையை விரித்துவிட்ட அவன், அத்துடன் நின்றிருக்கக் கூடாதா? அதுதான் இல்லை; ஏன்’ என்று வேறு கேட்டு வைத்தான்.

“தெரியும் நறுமணம், எல்லாம் எனக்குத் தெரியும்!” என்றான் அந்த அப்பாவி.

‘தெரியும் என்பதுதான் ஏற்கெனவே எனக்குத் தெரியுமே!"என்றேன் நான், வெறுப்புடன்.

‘கவலைப்படாதே; தை பிறந்ததும் கல்யாணத்தை முடித்துவிடலாம்!'என்றான் அவன், என்னைப் புரிந்துக் கொள்ளாமல்.

‘கல்யாணமா, இனி ஏது எனக்குக் கல்யாணம்?” என்று நான் சொல்ல நினைத்தேன்; ஆனால் சொல்லவில்லை. சொல்லி அவமானத்தால் அவ்வளவு சீக்கிரம் அவனைக் கொன்றுவிட'நான் விரும்பவில்லை!

இந்தப் பெண்கள்! - பெண்கள் என்று சொல்லும் போது என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் - எவ்வளவு சீக்கிரத்தில் தாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டைவிட்டு ஒடத்துணிந்து விடுகிறார்கள் எவ்வளவு சீக்கிரத்தில் தங்களைப் பெற்று வளர்த்தத் தாயையும், பேணிக்காத்தத் தந்தையையும் துச்சமென்று எண்ணித் துறந்துவிடுகிறார்கள்!

என்னைப் பொறுத்தவரை, எனக்குப் பெற்ற தாய் இல்லாமலிருக்கலாம்; பேணிக் காத்த தந்தையும் இல்லா மலிருக்கலாம். எஞ்சியிருந்த ஒர் அண்ணன்; அவனைக் கூடாவா மானத்தோடு நடமாட, உயிரோடு நடமாட நான் விட்டிருக்கக்கூடாது?