பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 விந்தன்

இல்லை; பார்க்க முடிந்தது, ஐயாவைப் பார்க்க முடிந்தது!” என்று தலையைப் பலமாக ஆட்டினார்கள்

இது என்ன சங்கடம்? இவர் ஏன் இப்படித் தடுமாறுகிறார்? இவர் ஏன் இப்படித் தடுக்கி விழுகிறார்? ஆச்சரியம் ஒரு பக்கம், அனுதாபம் இன்னொரு பக்கம். இவையிரண்டுக்குமிடையே சிக்கித் தவித்தநான், உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துவிட்டேன் போலிருக்கிறது; மன்னிக்கவேணும்’ என்றேன்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னுடைய சிரமத்துக்குக் காரணம் நீங்களல்ல; நானே தான்! - அதிருக்கட்டும்; நீங்களும் படிக்கத்தானே

வந்திருக்கிறீர்கள்?’ என்றார் அவர்.

படிக்கவா! நாசமாய்ப் போச்சு, இதற்கு நான் என்னத்தைச் சொல்ல?’ ‘ஆம் படிக்கத்தான்!” என்று சொல்லிவிட்டு, ‘மேலே இப்போது யார் படித்துக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டேன் மெல்ல.

‘உங்களைப் போன்ற ஒரு பெண்தான்!” “என்னைப் போன்ற ஒரு பெண்ணா?” “ஆம், அவர் எப்பொழுதுமே ஒவ்வொருப் பெண்ணாக வரவழைத்துத்தான் பாடம் சொல்லிக் கொடுப்பது வழக்கம்’ என்றார் அவர்.

‘திட்டம் நல்ல திட்டமாய்த்தான் இருக்கிறது!’ என்றேன் நான்.

இந்தச் சமயத்தில் தெருக்கதைவைத் திறந்துகொண்டு யாரோ வெளியே செல்வது போலிருக்கவே, ஜன்னல் வழியாக நான் எட்டிப் பார்த்தேன்.

கண்ணகி - குற்றால அருவியில் குளிக்கும்போது தாமிரபரணி ஆற்றோடு போய்விட்டக் கண்ணகி - உயிரோடு வெளியே போய்க் கொண்டிருந்தாள்!