பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 147

‘பேராசிரியரா! நானும் ஒரு பேராசிரியர்தான்’ என்றார் அவர் மென்னகையுடன்.

‘தெரியும்; நந்திமலையில் உங்களைப் பார்த்திருக் கிறேன்!” என்றேன் நான், புன்னகையுடன்.

அவர் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு, ‘ஒ, நீங்களா! வாருங்கள், வாருங்கள்; உட்காருங்கள்!’ என்று அழைத்துக்கொண்டு போய் பார்வையாளர் அறையில் உட்காரவைத்துவிட்டு, “இதோ வந்துவிட்டேன்'என்று மாடிக்கு ஓடினார்.

தான் வந்திருப்பது தெரிந்ததும் அவர் என்ன நினைப் பார்? ஏன் வந்தாள்? என்று நினைப்பாரா? அல்லது இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை?” என்று நினைப்பாரா?

அப்படி நினைப்பவராயிருந்தால் அத்தனை கடிதங்கள் எழுதியும் ஒரு கடிதத்துக்குக் கூடவா பதில் எழுதாமல் இருந்திருப்பார்?

எதுதான் காரணமாயிருக்கட்டும், எடுக்கும்போதே ஒரு பெண்ணின் விஷயத்தில் இத்தனை அலட்சியம் என்றால், அந்தப் பெண் அதைச் சகிப்பாளா, என்ன?

என்ன இழவோ, இவரைப் பார்ப்பது மடாதிபதி'யைப் பார்ப்பது போலல்லவா இருக்கிறது? தம்பிரான் சுவாமிகள்’ எப்போது வருவாரோ, என்னக் ‘கட்டளை'யுடன் வருவாரோ?

நறுமணம் இப்படி நினைத்தாளோ இல்லையோ, தம்பிரான் சுவாமிகள் வந்தார்; வந்து, ‘மேலே பாடம் நடந்துக் கொண்டிருக்கிறது; ஐயாவைப் பார்க்க முடியவில்லை!” என்று திருவாய் மலர்ந்தருளியவர்கள் சட்டென்று எதையோ நினைத்துக்கொண்டு, ‘இல்லை