146 விந்தன்
அம்மாவாக - அது போதாதா, உனக்கு? அழாதே; நான் ஒருவன் உயிரோடிருக்கும்வரை நீ அழாதே’ என்று என்னைத் தேற்றினான் அந்த அசட்டு அண்ணா.
அதுதான் சமயமென்று, ‘போகட்டும், இன்னும் கொஞ்ச நாட்களுக்காவது அவன் பிழைத்துப் போகட்டும்’ என்று நினைத்தவளாய், அவனுடையக் கால்களைக் கண்ணிரால் கழுவிவிட்டு எழுந்தேன் நான்.
o ** *
மறுநாள் காலை என் அண்ணா வெளியே சென்றதும், முதல் நாள் இரவே தீர்மானித்து வைத்திருந்தபடி, நான் அவருக்கு என்னுடைய முதல் கடிதத்தை எழுதினேன்; பதில் இல்லை. இரண்டாவது, மூன்றாவது என்று இருபது கடிதங்களுக்கு மேல் எழுதினேன்; பதிலேயில்லை!
“இனி தாமதிப்பதில் பிரயோசனமில்லை’ என்று தோன்றிற்று, எனக்கு; எனவே, அவருடைய இருப்பிடத்தைத் தேடிச் சென்றேன். வாசலில் நின்று கொண்டிருந்த ஒர் இளைஞர், ‘யார் வேண்டும், உங்களுக்கு?’ என்றார் என்னைக் கண்டதும்.
அந்த இளைஞரை அதற்கு முன் எங்கேயோ பார்த்தது போலிருக்கவே, எங்கே பார்த்திருப்போம், இவரை? என்று எண்ணி, என் நினைவு சுழன்றது. ஆம், நந்திமலையில் அந்தப் பேராசிரியருடன் இவரைப் பார்த்திருக்கிறோமே?
‘ஏன் அப்படியே நின்றுவிட்டீர்கள்? உள்ளே வாருங்கள்; யார் வேண்டும், உங்களுக்கு?"என்றார் அவர், மீண்டும்.
நான் உள்ளே நுழைந்தபடி ‘பேராசிரியரைப் பார்க்கவேண்டும்’ என்றேன்.