உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 145

பெரிய மனிதர்கள் இருவரும் ஆளுக்கு ரூபாய் ஐம்பது வீதம் கொடுக்கிறார்கள். அத்துடன் என்னுடைய சம்பளத்திலிருந்து ரூபாய் நாற்பது எடுத்துப் போட்டு மாதம் ரூபா இருநூறு தபாலாபீசில் கட்டி வருகிறேன். இதுவரை என்ன சேர்ந்திருக்கிறது தெரியுமா? ரூபாய் நாலாயிரம் நறுமணம், ரூபாய் நாலர்யிரம் அப்புறம் என்ன, இன்னும் ஐந்தே மாதங்கள் தான்; ரூபாய் ஆயிரம் அத்துடன் சேர்ந்ததும் நாலாயிரம் ஐயாயிரமாகிவிடும் - அதற்குள் தையும் பிறந்துவிடும். உனக்கொரு வழியும் பிறந்துவிடும், என்ன, நான் சொல்வது? சரிதானே?- எங்கே சிரி; கொஞ்சம் சிரி!’ என்று மூச்சுவிடாமல் சொல்லிக் கொண்டே அவன் என்னுடைய முகத்தைத் திருப்பினான்அவ்வளவுதான்; ‘'ஐயோ, அண்ணா!’ என்று நான் அவனுடைய கால்களைப் பற்றிக்கொண்டு விட்டேன்!

‘என்ன நறுமணம், என்ன?’ என்று அவன் பதறினான்.

‘என்னவா... என்னவா...?’ என்று நான் மேலே ஒன்றும் சொல்லமுடியாமல் கேவிக்கேவி அழுது கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த என் பாட்டி, ‘என்ன நம்பி, என்ன நடந்தது?” என்றாள் நிலைத்த கண் நிலைத்தபடி.

‘ஒன்று மில்லை. பாட்டி கல்யாண விஷயமாய் பேசிக் கொண்டிருந்தேன்; அழ ஆரம்பித்துவிட்டது!” எனறான அணணா.

‘இவ்வளவுதானே? தன்னுடையக் கல்யாணத்தை அப்பாவும் அம்மாவும் இருந்து பார்க்கத்தான் கொடுத்து வைக்கவில்லையே என்ற வருத்தமாயிருக்கும், அவளுக்கு!” என்றாள் அவள்!

‘அதற்கா இப்படி அழுகிறாய்? நான்தான் இருக்கிறேனே- அப்பாவுக்கு அப்பாவாக; அம்மாவுக்கு

ud.ldm — 10