பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 157

அவரை நான் அனுதாபத்துடன் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தேன்!

<> <> <>

இனி என்ன? இப்படி ஒரு கேள்வி என் உள்ளத்தில் எழுந்தது - எழுந்த கேள்வி எழுந்தவுடன் நிற்கவில்லை; என்னுடைய வீட்டை நோக்கி நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியின் போதும் அது என்னை, இனி என்ன, இனி என்ன? என்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனவே திருப்பிக் கேட்டேன் - என்னவென்று, ‘ இனி என்ன?’ என்றுதான்!

இனி என்ன?

இனி என்ன?

இனி என்ன?

இனி என்ன?

கேள்விக்குப் பதில் கேள்விதான் கிடைத்தது; பதில் கிடைக்கவில்லை!

வேண்டும்; நன்றாக வேண்டும் - இனிமேல்தான் வாழவேண்டும், இனிமேல்தான் வாழ வேண்டும்’ என்று அழுது புலம்பிய அவருக்கு முன்னால் போய் நின்று, ‘இதோ இருக்கிறேன், வாழ!’ என்று கைக் கொடுத்தேனே, எனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்!

அவரைப் பொறுத்தவரை அவர் ஒரு வழிக்கு இரண்டு வழிகளாகக் காட்டி விட்டார் - கன்னிப்பெண்ணாக நடித்து ராமமூர்த்தியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டு மென்பது ஒன்று; அந்தக் கல்யாணம் வேண்டாமென்றால்,