பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 171

கொள்ளாமல், ‘சரி போய்வாருங்கள்!’ என்று அவரைக் கொண்டுபோய் வாசல்வரை விட்டுவிட்டு வரப் போனேன்.

அப்போது எதிர்பாராத விதமாக எங்களுக்கு எதிர்த்தாற்போல் வந்த அண்ணா, ‘வாருங்கள், வாருங்கள்: நாலைந்து நாட்களாகவே நான் உங்களைப் பார்க்க வேண்டுமென்று இருந்தேன்!” என்று பேராசிரியரை வரவேற்றுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

‘'நானும் உங்களைப் பார்க்கவேண்டுமென்று தான் வந்திருந்தேன்'என்று சொல்லிக்கொண்டே, பேராசிரியரும் திரும்பி அவனைப்பின் தொடர்ந்தார்.

‘ஏன் அண்ணா, இன்று நீ வேலைக்குப் போகலையா?” என்று நான் கேட்டேன்.

‘போனேன்; ஆனால், அதில் ஒரு வேடிக்கை!” என்றான் அண்ணா.

“என்ன வேடிக்கை, அண்ணா?”

“அங்கே போனபிறகுதான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பது என்னுடைய நினைவுக்கு வந்தது!”

‘'நல்ல வேடிக்கைதான், போ!’ என்று நான் சிரித்தேன்.

‘இதில் சிரிப்பீதிற்கு என்னம்மா, இருக்கிறது? நம்மைப்போன்றவர்கள் வாழும் இயந்திர வாழ்'வில் இதெல்லாம் சகஜம்!”

‘சரியாகச் சொன்னீர்கள், சரியாகச் சொன்னீர்கள்!” என்று பேராசிரியர் அவன் சொன்னதை ஆமோதித்து விட்டு, நறுமணத்தின் திருமணம் குறித்து நான் உங்களுடன் பேச வந்தேன்’ என்றார் தம்முடைய பார்வையை என்மேல் செலுத்தி.