பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 173

‘வைத்துக்கொள்ளலாம்; ஆனால்...” ‘ஆனால் என்ன?”

‘இம்முறை கல்கத்தாவில் நடக்கவிருக்கும் தமிழ் விழாவில் நானும் கலந்துக் கொள்ளலாமென்று இருக்கிறேன்; அது முடிந்தபின் வேண்டுமானால் நீங்கள் திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.”

‘அதற்கென்ன, அப்படியே செய்தால் போச்சு நானும் எங்கள் பத்திரிகையின் பிரதிநிதி என்ற முறையில் அந்த விழாவில் கலந்துகொண்டாலும் கலந்து கொள்ளலாம்!”

‘அப்படியா, மகிழ்ச்சி! நான் வரட்டுமா? ‘என்று பேராசிரியர் எழுந்தார்.

அப்போது, ‘யார் அது, வாத்தியார் ஐயாவா? எங்கே உங்களை ரொம்ப நாட்களாக இந்தப் பக்கமே காணோம்?’ என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பாட்டி.

‘'காரியமில்லாமல் இங்கே வந்து என்னப் பிரயோசனம், பாட்டி? இன்றுதான் காரியம் இருந்தது: வந்தேன்!”

‘காரியம், காரியம் என்று சொல்லாதீர்கள், வாத்தியார் ஐயா, எங்கள் பக்கத்திலே காரியம் என்றால் கருமாந்திரம் என்று அர்த்தம்!” -

அதற்குள் என் அண்ணா குறுக்கிட்டு, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை, பாட்டி! ஆசிரியர் கல்யாண விஷயமாக வந்திருக்கிறார்!” என்று அவர் வந்த விஷயத்தை அவளுக்குத் தெளிவு படுத்தினான்.

‘'கல்யாணமென்றால் முதலில் இவரா வருவது? பெண்ணைப் பார்க்க வேறு யாராவது வர வேண்டாமோ?’ என்றாள் பாட்டி.